'வேலைக்காரன்' முதல் நாள் வசூல் விபரம்

  • IndiaGlitz, [Saturday,December 23 2017]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் நேற்று வெளியாகி பெருவாரியான பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் கோலிவுட் திரையுலகை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்த படம் முதல் நாளில் ரூ.7.25 கோடி வசூல் செய்து சிவகார்த்திகேயன் மிகப்பெரிய முதல் நாள் வசூல் என்ற பெருமையை பெற்றுள்ளது.

சென்னையில் ரூ.89 லட்சம், செங்கல்பட்டு பகுதியில் ரூ.2.4 கோடி, கோவையில் ரூ.1.28 கோடி, நெல்லை-குமரி பகுதியில் ரூ.32 லட்சம், மதுரையில் ரூ.80 வசூல் செய்துள்ளடு. இன்னும் இரண்டு நாட்கள் விடுமுறை தினங்கள் என்பதால் இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.