2வது வாரத்திலும் விறுவிறுப்பான வசூல் வேட்டையில் வேலைக்காரன்

  • IndiaGlitz, [Monday,January 08 2018]

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' திரைப்படம் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் வெளிவந்து ஊடகங்கள் மற்றும் விமர்சகர்களின் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றது. இந்த படத்தின் ஓப்பனிங் வசூல் கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களின் ஓப்பனிங் வசூலை நெருங்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் இரண்டாவது வாரத்திலும் 'வேலைக்காரன்' நல்ல வசூலை பெற்றது. கடந்த வாரயிறுதி நாட்களில் சென்னையில் இந்த படம் 17 திரையரங்குகளில் 202 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ. 59,17,432 வசூல் செய்தது. மேலும் திரையரங்குகளில் 70% பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படம் வெளியான டிசம்பர் 22ஆம் தேதியில் இருந்து நேற்று ஜனவரி 7 வரையிலான நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.8,62,29,563  வசூல் செய்துள்ளது. இன்னும் ஒரிரு நாட்களில் இந்த படத்தின் வசூல் ரூ.10 கோடியை நெருங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

மலேசியா எனக்கு இரண்டாவது வீடு: ரஜினிகாந்த்

நேற்று மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், நடிகர் சங்க நிர்வாகிகள் மற்றும் கோலிவுட் திரையுலகின் நடிகர் நடிகைகள் பலர் கலந்து கொண்டனர்.

110 திரையரங்குகளில் 25 நாட்கள்: அருவியின் அருமையான சாதனை

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி வெளியான சின்ன பட்ஜெட் படமான 'அருவி' மிகப்பெரிய வெற்றியை பெற்றது மட்டுமின்றி வசூலிலும் சாதனை செய்து வருகிறது.

கமல் அறிவுரையை ஏற்றுக்கொள்ள தயார்: அதிமுக அமைச்சர்

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில மாதங்களாகவே தமிழக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்து வருவதோடு, பல்வேறு பிரச்சனைகளை தீர்க்க அறிவுரையும் வழங்கி வருகிறார்.

இந்த ஐந்து வார்த்தைகளை ரஜினியால் சொல்ல முடியுமா? அன்புமணி

ரஜினிகாந்த் ஐந்தே ஐந்து வார்த்தையை கூறுவாரா? மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கணும்,. இந்த ஐந்து வார்த்தையை ரஜினியால் சொல்ல முடியுமா?

அரசியல்வாதிகளுக்கு ஆர்.ஜே.பாலாஜியின் பதிலடி

கடந்த சில மாதங்களாக கட்சி பேதமின்றி ஒருசில அரசியல்வாதிகள் திரையுலகினர்களிடம் மோதுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். அவர்களுடைய விமர்சனங்கள் ரஜினி, கமல், விஜய் உள்பட பலரின் மீது பாய்ந்து கொண்டிருக்கின்றது.