'விஐபி 3', 'விஐபி 4' படங்கள் குறித்து தனுஷ்

  • IndiaGlitz, [Sunday,July 09 2017]

'விஐபி' படத்தின் முதல் பாகத்தின் கேரக்டர்கள் தமிழக, ஆந்திர மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டதால் அந்த கேரக்டர்களை அப்படியே விட்டுவிட மனமில்லாமல் அதன் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் முதல்பாகத்திற்கு ஒரு நல்ல முடிவு கிடைத்ததால் இரண்டாம் பாகத்தின் கதை எழுதுவதில் ஒரு சவால் ஏற்பட்டது.
இந்த நிலையில் 'கொடி' படத்தின் படப்பிடிப்பின்போது 'விஐபி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான ஒரு ஸ்பார்க் கிடைத்ததால் இன்று உங்கள் முன்னாள் இந்த படம் உள்ளது. இந்த படம் உருவாக முக்கிய காரணமாக இருந்த தயாரிப்பாளர் தாணு அவ்ர்களுக்கு எனது நன்றிகள். அவர் இல்லாமல் இந்த படம் உருவாக வாய்ப்பே இல்லை.
கஜோல் மேடம் 20 ஆண்டுகள் கழித்து விஐபி மூலம் மீண்டும் தமிழுக்கு வந்ததை நாங்கள் பெருமையாக கருதுகிறோம். மேலும் விஐபி 3 மற்றும் 'விஐபி 4' படங்களை படமாக்கும் ஐடியா உள்ளது. 'விஐபி 3' படத்தில் கஜோல் கண்டிப்பாக இருப்பார்கள் என்று நினைக்கின்றேன். ஆனால் 'விஐபி 3' படத்தில் அவர்கள் நடந்து கொள்வதை பொறுத்துதான் அவர்களை 'விஐபி 4' படத்திற்கு உயிருடன் வைத்திருப்பதா அல்லது கொன்று விடுவதா? என்பதை முடிவு செய்ய வேண்டும்' என்று கூறினார்.
தனுஷின் இந்த பேச்சில் இருந்து விஐபி 3, மற்றும் 'விஐபி 4' ஆகிய படங்களையும் விரைவில் எதிர்பார்க்கலாம் என்பது தனுஷ் ரசிகர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம்