விக்ரமின் அடுத்த படம் குறித்த முக்கிய அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,October 09 2015]

விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' படம் வரும் 21ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள நிலையில், விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் படப்பிடிப்பு வரும் நவம்பர் முதல் வாரத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரிமா நம்பி' இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ள இந்த படத்தில் விக்ரம் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஐங்கரன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தை முதலில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க இருந்ததாகவும், பின்னர் தற்போது ஐங்கரன் தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

விக்ரம், காஜல் அகர்வால், பிந்துமாதவி, மற்றும் பலர் நடிக்கவுள்ள இந்த படத்திற்கு 'மர்ம மனிதன்' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரவுள்ளது.

More News

விஷாலுக்கு வில்லனாகும் பிரபல விநியோகிஸ்தர்?

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் பிசியாக இருக்கும் விஷால், தேர்தல் முடிந்தவுடன் 'கொம்பன்' பட இயக்குனர் முத்தையாவின் இயக்கத்தில் உருவாகவுள்ள 'மருது' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது....

ராகவா லாரன்ஸ் மாணவர்களை கவர்ந்த 'புலி'

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' திரைப்படம் கடந்த 1ஆம் தேதி வெளியாகி குழந்தைகள் மற்றும் குடும்ப ஆடியன்ஸ்களின் அமோக ஆதரவால் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது....

சிம்புவுக்கு வடிவேலு கூறிய அறிவுரை

நடிகர் சங்க தேர்தல் பிரச்சாரம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் நேற்று முன் தினம் சிம்பு, விஷாலை நரி என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....

சமாதானத்திற்கு தயாரா? விஷாலின் அதிரடி முடிவு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை தவிர்க்க சரத்குமார் மற்றும் விஷால் ஆகிய இரு அணிகளையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள்...

'புலி'யை பாராட்டிய மேலும் ஒரு திரையுலக விஐபி

இளையதளபதி விஜய் நடித்த 'புலி' படத்திற்கு ஒருசில ஊடகங்கள் நெகட்டிவ் விமர்சங்களை கொடுத்திருந்தபோதிலும்...