நாளைய முழு ஊரடங்கில் திடீர் திருப்பம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை, மதுரை, கோவை, உள்பட 5 நகரங்களில் நாளை முதல் நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் இதனை அடுத்து நாளை முதல் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளான மளிகை கடைகள், காய்கறி கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கும் என்றும் அரசு நேற்று அறிவித்தது
இதனையடுத்து இன்று காலை முதல் மளிகை கடைகள் மற்றும் காய்கறி கடைகளில் கூட்டம் அலைமோதியது. பொதுமக்களில் பலர் சமூக விலகலை கூட கடைப்பிடிக்காமல் முண்டியடித்துக்கொண்டு காய்கறிகளையும் மளிகை பொருட்களை வாங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி நாளை முதல் காய்கறிகள் கடைகள் மட்டும் திறந்திருக்கும் என்றும் ஆனால் காய்கறி கடைகளோடு மளிகை பொருட்களை விற்கும் கடைகள் திறக்க அனுமதி இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேபோல் கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும தலைவர் கார்த்திகேயன் அவர்கள் இந்த தகவலை தெரிவித்துள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments