காய்கறி, மளிகை வாங்கவும் கட்டுப்பாடு: தமிழக முதல்வர் அதிரடி உத்தரவு

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர அனைத்து கடைகளையும் மூட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது

இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் காய்கறிகள் மற்றும் மளிகை கடைகள் காலை 6 மணி முதல் பகல் 2 30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. காய்கறி மற்றும் மளிகை கடைகளில் சமூக விலகலை சரியாக கடைபிடிக்காததால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது மீண்டும் இதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நாளை முதல் காய்கறி மற்றும் மளிகை கடைகள் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:

அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும். அந்த நேரத்தில் மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கிக் கொள்ளலாம். இந்த உத்தரவு நாளை முதல் அமலுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார்.

More News

இதுவரை கொரோனா பாதிப்பு இல்லாத நாடுகள்!!! உலக நாடுகளில் பாதிப்பு எண்ணிக்கை !!!

உலகத்தின் பெரும்பாலான நாடுகள் தற்போது கொரோனா பற்றிய அச்சத்தில் உறைந்து இருக்கும்போது சில நாடுகள் மட்டும் நிம்மதி பெரூமூச்சு விட்டுக்கொண்டிருக்கின்றன.

கொரோனா விடுமுறையில் சூரி கூறிய பயனுள்ள யோசனை!

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இதுவரை சாப்பிட, தூங்க கூட நேரமில்லாமல் பிசியாக சுற்றியவர்கள் எல்லாம் கடந்த 10 நாட்களாக வீட்டை விட்டு வெளியே

இந்தியாவில் ஒரே நாளில் மேலும் 601 பேர்களுக்கு கொரோனா! அதிர்ச்சி தகவல்

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 24ஆம் தேதி முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

கொரோனாவை கண்டுபிடித்த முதல் தீர்க்கதரிசி இவர்தான்: யோகிபாபு

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து மனித இனமே அச்சத்தில் உள்ளது. கொரோனா வைரசுக்கு இன்னும் மருந்துகள் மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால்

திடீரென தூய்மையான கங்கை நீர்: எஸ்.ஆர்.பிரபு சுட்டிக்காட்டிய கட்டுரை

கங்கை தண்ணீரை தூய்மை செய்ய சமீபத்தில் மத்திய அரசு 7 ஆயிரம் கோடி செலவு செய்யும் என அறிவித்தது. அதுமட்டுமின்றி முதல்கட்டமாக 220 கோடி ஒதுக்கீடு செய்து கங்கையை தூய்மைப்படுத்தும் பணியையும் தொடங்கியது