வீட்டிற்கே வரும் காய்கறிகள்: தமிழக அரசின் அபார முயற்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்தியாவசியமான தேவையான காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்களை வாங்க பொது மக்கள் திண்டாடி வருகின்றனர்
இந்த நிலையில் சென்னையில் ஸ்விக்கி, ஜொமைட்டோ மற்றும் டன்சோ ஆகியவை மூலம் வீடுகளுக்கு காய்கறியை டோர் டெலிவரி செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சிஎம்டிஏ உறுப்பினர்களின் செயலாளர் கார்த்திகேயன் அவர்கள் தெரிவித்துள்ளார்
கோயம்பேடு மார்க்கெட் விலைக்கே காய்கறிகளை பொதுமக்களுக்கு விற்பனை செய்ய மேற்கண்ட மூன்று நிறுவனங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் 16 வகை காய்கறிகள் ஐந்து வகை பழங்கள் கொண்ட மூன்று தொகுப்புகள் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் அறிவித்துள்ளார். பொதுமக்கள் ஆர்டர் செய்யும் காய்கறிகள், பழங்களை குறித்த நேரத்தில் ஸ்விக்கி, ஜொமைட்டோ மற்றும் டன்சோ ஊழியர்கள் டெலிவரி செய்வார்கள்
ஏற்கனவே தமிழக அரசு தோட்டக்கலைத் துறையின் மூலம் காய்கறிகள் மற்றும் பழங்களை வீடுகளுக்கே சென்று டெலிவரி செய்யும் முறையை தொடங்கியுள்ளது. தோட்டக்கலை துறையின் இணையதளத்தில் தேவையான காய்கறிகள், பழங்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஊரடங்கு உத்தரவு நேரத்தில் இது மிகப் பெரிய சேவையாக கருதப்படுகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments