புதிய முயற்சியில் தமிழக அரசு....! ரூ.105-க்கு இத்தனை காய்கறிகளா...?
Send us your feedback to audioarticles@vaarta.com
10 காய்கறிகள் ஒரு தொகுப்பானது கூட்டுறவுத்துறை சார்பில், 105 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று முதல் தமிழகத்தில் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் நேற்றைய தினம் மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக, முழு தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தது. காய்கறிக்கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் என அனைத்து இடங்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வாங்க மக்கள் வந்து குவிந்தனர்.
தோட்டக்கலைத்துறை மற்றும் உள்ளாட்சிகளுடன் இணைந்து, கூட்டுறவுத்துறை சார்பில் வீடுகளுக்கே நடமாடும் காய்கறி வாகனம் வரும் என அரசு அறிவித்திருந்தது. ஆனால் இந்த அறிவிப்பை நம்பாமல் மக்கள் கூட்டம் அங்கும், இங்கும் அலைமோதியது.
ஊரடங்கு என்பதால், பெரும்பாலான கடைகளில் காய்கறிகளின் விலை அதிகரித்தே இருந்தது. பீன்ஸ் ஒரு கிலோ-250ரூ, ஒன்றரை கிலோ வெங்காயம் - 100 ரூ, ஒன்றரை கிலோ தக்காளி-50 ரூபாய், தேங்காய், முருங்கை என அனைத்து காய்கறிகளின் விலையும் அதிகமாகவே இருந்தது. ஆனால் இன்றைய தினம் வீடுகள் தேடி வந்த காய்கறி வண்டியில் இருந்த காய்கறி தொகுப்பின் விலை வெறும் 105 ரூபாயாக மட்டும் இருந்தது. 10 காய்கறிகள் அடங்கிய இத்தொகுப்பும் விலைக்கு தகுந்தாற்போல் தான் உள்ளது. இதனால் நேற்று காய்கறி வாங்கிய மக்கள் பலரும் வேதனையில் உள்ளனர்.
TN Government is selling vegetables and fruits through 2600 mini vans and tricycles in Chennai during the lockdown with strict curbs from May 24.@businessline @chennaicorp @albyjohnV pic.twitter.com/Md13JiFiTt
— Bijoy Ghosh (@bijoyghosh70) May 24, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout