அஜித்-ஷாலினியை அடுத்து வெளிநாடு செல்லும் ஷாமிலி
- IndiaGlitz, [Wednesday,May 25 2016]
தல அஜித், மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகளுடன் ஓய்வு எடுப்பதற்காக சமீபத்தில் வெளிநாடு சென்றார் என்ற தகவலை ஏற்கனவே பகிர்ந்தோம். இந்நிலையில் ஷாலினிஅஜித்தின் தங்கையான ஷாமிலியும் விரைவில் வெளிநாடு செல்லவுள்ளார். ஆனால் ஷாமிலி செல்வது வெளிநாட்டு படப்பிடிப்பிற்காக என்பது குறிப்பிடத்தக்கது.
விக்ரம்பிரபு, ஷாமிலி நடித்து வரும் 'வீரசிவாஜி' என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தாறுமாறு தக்காளி சோறு என் ஆள பாரு பப்பாளி தோலு' என்ற பாடல் சமீபத்தில் சிம்பு குரலில் டி.இமான் இசையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.
இந்த பாடலை ரஷ்யாவில் உள்ள ஜார்ஜியா பகுதியில் படமாக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். வரும் ஜூன் 1ஆம் தேதி ரஷ்யாவில் இந்த பாடல் படமாக்கப்படவுள்ளதாகவும், இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனப்பயிற்சி அளிக்கவுள்ளதாகவும் படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.
விக்ரம்பிரபு, ஷாமிலி, ஜான்விஜய், ரோபோ சங்கர், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கி வருகிறார். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நிறுவனம் சார்பில் எஸ்.நந்தகோபால் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.