தமிழில் உருவாகி வரும் இன்னொரு ரோட் மூவி'

  • IndiaGlitz, [Thursday,February 04 2016]

சமீபத்தில் விக்ரம், சமந்தா நடிப்பில் வெளியான '10 எண்றதுக்குள்ள' படம் ஒரு ரோட் மூவியாக வெளிவந்தது. அதேபோல் விஷால் நடித்த கதகளி திரைப்படமும் சென்னையில் இருந்து விழுப்புரம் செல்லும் ஒரு ரோட் மூவி என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இதே பாணியில்தான் விக்ரம்பிரபு நடித்து வரும் 'வீரசிவாஜி' படமும் ஒரு ரோட்மூவியாக உருவாகி வருவதாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.


விக்ரம் பிரபு இந்த படத்தில் கால்டாக்சி டிரைவராக நடித்துள்ளதாகவும், பாண்டிச்சேரியில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் நடைபெறும் சம்பவங்கள்தான் படத்தின் கதை என்றும் கூறப்படுகிறது.

விக்ரம் பிரபு, ஷாமிலி, ஜான்விஜய், நான் கடவுள் ராஜேந்திரன், ரோபோ சங்கர் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தை கணேஷ் விநாயக் இயக்கி வருகிறார். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவும், ரூபன் படத்தொகுப்பும் செய்து வருகின்றனர். மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் தயாரித்து வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

More News

விஜய்சேதுபதியின் 'சேதுபதி' சென்சார் தகவல்கள்

விஜய்சேதுபதி நடிக்கும் இரண்டு படங்கள் இம்மாதம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது என்பது அனைவரும் அறிந்ததே...

'காதலும் கடந்து போகும்' படத்தின் முக்கிய, விரிவான தகவல்கள்

விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ள காதலும் கடந்து போகும்' திரைப்படம் வரும் 12ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில்..

சந்தானம்-கருணாஸ் இடத்தில் எமிஜாக்சன்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'எந்திரன்' ...

உலக அளவில் 15வது இடத்தையும் இந்திய அளவில் முதலிடத்தையும் பிடித்த விஜய்

சர்வதேச அளவில் தகவல் பெட்டகமாக விளங்கி வரும் விக்கிபீடியா இணையதளம் தொடங்கி 15 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த இணையதளத்தில்...

நடிகர் பிரகாஷ்ராஜூக்கு கிடைத்த பதவி உயர்வு

பிரபல குணசித்திர மற்றும் வில்லன் நடிகர் பிரகாஷ்ராஜ், இயக்குனர் சிகரம் கே.பாலசந்தரின் பள்ளியில் இருந்து வந்த மாணவர்...