'அங்காடித்தெரு' மகேஷின் 'வீராபுரம்' படம் எப்படி?

  • IndiaGlitz, [Saturday,September 25 2021]

இயக்குனர் வசந்தபாலன் இயக்கிய ’அங்காடி தெரு’ என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்த மகேஷ் நடித்துள்ள அடுத்த படம் ‘வீராபுரம்’. இந்த படம் மணல் திருட்டு மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த கதையம்சம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கிராமத்தில் ஓட்டல் நடத்தி வரும் ஹீரோ மகேஷ், மணல் திருடும் லாரி மோதுவதால் தனது தந்தை உள்ளிட்ட மூன்று உயிர்களை இழக்கின்றார். இதனை அடுத்து மணல் திருட்டை தடுத்து நிறுத்தும் நடவடிக்கைகளில் இறங்க, அதனால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், அந்த பிரச்சனைகளை அவர் எப்படி சமாளிக்கின்றார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

அங்காடித்தெரு படத்திற்கு பிறகு ஒரு நல்ல படத்தில் மகேஷ் நடித்துள்ளார் என்பது இந்த படத்தை பார்ப்பதிலிருந்து தெரிகிறது. வீரம், விவேகம் மற்றும் ஆவேசத்துடன் கூடிய கிராமத்து இளைஞராகவே மகேஷ் வாழ்ந்துள்ளார். வழக்கம்போல் நாயகி மேகனா தனக்கு கொடுத்த வேலையை செய்துள்ளார் என்பதும் படத்தின் பாடல்களுக்கு மட்டும் அவர் உதவுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் தங்கள் கேரக்டரில் உணர்ந்து நடித்துள்ளனர்.

அறிமுக இயக்குனரான பிஎஸ் செந்தில்குமார் முதல் படத்திலேயே ஒரு சமூக பிரச்சனையை கையில் எடுத்து அதை சுவாரசியமாகவும் ரசிக்கும் வகையிலும் கமர்சியல் காட்சிகளை வைத்தும் இயக்கியுள்ளார். ரித்தேஷ் மற்றும் ஸ்ரீதர் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை ஓகே ரகம்.