சியான் விக்ரமின் 'வீரதீர சூரன்' படத்தின் ரிலீஸ் தேதி இதுவா? பெரிய படங்களுடன் மோதல்?

  • IndiaGlitz, [Thursday,September 26 2024]

பிரபல நடிகர் விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படம் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் நாயகியாக துஷாரா விஜயன் நடித்துவரும் நிலையில், வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடித்து வருகிறார் என்பதும், மலையாள நடிகர் சித்திக் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படம் முதலில் இரண்டாம் பாகம் வெளியாகும் என்றும் அதன் பின்னர் முதல் பாகம் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விருந்தாக இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருப்பதாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

ஏற்கனவே கிறிஸ்துமஸ் விருந்தாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’விடுதலை 2’ மற்றும் ஷங்கர் இயக்கத்தில் உள்ள ’கேம் சேஞ்சர்’ ஆகிய படங்கள் வெளியாக இருப்பதால், இந்த இரண்டு பெரிய படங்களுடன் 'வீர தீர சூரன்’ மோதுமா? என்பதைக் காத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

More News

10 வயது இளையவரான கணவரை பிரியும் 'இந்தியன்' பட நடிகை.. முடிவுக்கு வரும் திருமண உறவு..!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான "இந்தியன்" படத்தில் நடித்த நடிகை, தன்னைவிட 10 வயது குறைவான ஒருவரை திருமணம் செய்து கொண்ட நிலையில்,

சதீஷின் 'சட்டம் என் கையில்' படம் பார்த்த 'கோட்' பிரபலம்.. என்ன சொன்னார் தெரியுமா?

தமிழ் திரை உலகில் முன்னணி காமெடி நடிகராக இருந்து, தற்போது ஹீரோவாக நடித்து வரும் நடிகர் சதீஷ் நடிப்பில் உருவான 'சட்டம் என் கையில்' என்ற திரைப்படம் நாளை திரையரங்குகளில்

'வேட்டையன்' படத்தில் அபிராமி கேரக்டர்.. சூப்பர் வீடியோ வெளியிட்ட லைகா..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்' திரைப்படம் அக்டோபர் 10ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

கணவருடன் சென்று ராகுல் காந்தியை சந்தித்த மேகா ஆகாஷ்.. என்ன காரணம்?

காங்கிரஸ் கட்சியின் எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தியை சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நடிகை மேகா ஆகாஷ், தனது கணவருடன் சென்று

18 ஆண்டுக்கு பின் கிடைத்த விடை.. இதற்கும் விடை தாருங்கள் 007..  இயக்குனர்   சிம்புதேவன் பதிவு வைரல்..!

18 ஆண்டுகளுக்கு முன் ரிலீசான தனது படத்தின் புதிருக்கு விடையை கண்டுபிடித்து கொடுத்த இணையதள பயனாளி ஒருவரிடம் இயக்குனர் சிம்பு தேவன் 'அந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட இ