'சம்பவம் வெயிட்டிங்'.. வீர தீர சூரன்' பட அப்டேட்டை தெரிவித்த பிரபலம்..!

  • IndiaGlitz, [Friday,October 18 2024]

விக்ரம் நடித்து வரும் 'வீர தீர சூரன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை தெரிவித்த தயாரிப்பாளர் விரைவில் சம்பவம் வெயிட்டிங் என்று தெரிவித்துள்ளார். இதனால் விக்ரம் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விக்ரம் நடிப்பில், அருண்குமார் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ் இசையில் உருவாகி வரும் திரைப்படம் வீர தீர சூரன். இந்த படம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் முதல் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பதும், பெரும்பாலான காட்சிகள் மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படமாகி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்ரம் ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ள இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா உட்பட பலர் நடித்து வருகிறார். ஹெச்.ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தான் முதலில் தயாராகி வருவதாகவும், முதல் பாகம் இன்னும் சில மாதங்களில் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை ஷிபு தமீன்ஸ் சற்றுமுன் தெரிவித்தார். மதுரையில் இருந்து சற்றுமுன் கிடைத்த தகவல், வீர தீர சூரன் படத்தின் அனைத்து நடிகர்கள் மற்றும் டெக்னீசியன்கள் பிசியாக இருப்பதால் இறுதி கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

34 ஆண்டுகள் சாதனை செய்த சியான் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில் ஒரு சிங்கிள் போஸ்டர் மற்றும் வெளியிடப்பட்டால் அது முறையாகாது, எனவே ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் வெயிட்டிங். விரைவில் அறிவிப்பு வரும் என தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து, வீர தீர சூரன் படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

ராஷ்மிகா மந்தனாவுக்கு புதிய பதவி: நியமன அறிவிப்பை வெளியிட்ட மத்திய உள்துறை அமைச்சகம்..!

நடிகை ராஷ்மிகா மந்தனா முக்கிய பதவியில் நியமனம் செய்யப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை கர்ப்பம்.. குவியும் ரசிகர்களின் வாழ்த்துக்கள்..!

'கபாலி' என்ற திரைப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த நடிகை ராதிகா ஆப்தே, கர்ப்பமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளதை  தொடர்ந்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

ரம்யா பாண்டியனுக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா?  ரிஷிகேஷில் திருமண ஏற்பாடு..!

நடிகை ரம்யா பாண்டியன் யோகா மாஸ்டரை திருமணம் செய்ய இருப்பதாகவும், இவர்களின் திருமணம் ரிஷிகேஷில், கங்கை நதி அருகே நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

'பாக்கியலட்சுமி' ரீல் ஜோடி ரியல் ஜோடியாகிறதா? விரைவில் திருமண அறிவிப்பு?

விஜய் டிவி சீரியல்களில் நடிக்கும் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடிகள் ஆகி உள்ளனர் என்ற நிலையில் தற்போது 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடிக்கும் ரீல் ஜோடியும் விரைவில் ரியல் ஜோடி ஆக இருப்பதாக

என்னை சேவ் பண்ணுங்க.. கையெடுத்து கும்பிட்ட பெண் போட்டியாளர்..!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைத்த ஒரு டாஸ்க்கில் பெண்கள் அணி வெற்றி பெற்றதை அடுத்து பெண்கள் அணியில் நாமினேஷனில் உள்ளவர்களில் ஒருவரை காப்பாற்றலாம் என்று பிக் பாஸ் அறிவித்திருந்தார்.