இதோடு நிறுத்தி கொள்ளுங்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் ரசிகர்களுக்கு பிரபல நடிகை எச்சரிக்கை..!
Send us your feedback to audioarticles@vaarta.com
இதோட நிறுத்திக் கொள்ளுங்கள் என பிரபல நடிகை, ஜூனியர் என்டிஆர் ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜூனியர் என்டிஆர் நடித்த ’தேவாரா’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் இன்று காலை ஹைதராபாத்தில் உள்ள ஒரு தியேட்டரில் ரசிகர்கள் கிடா வெட்டி அதன் ரத்தத்தை போஸ்டர்கள் மற்றும் கட்டவுட் மீது தெளித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
தமிழ்நாட்டில் கட் அவுட்டை பாலாபிஷேகம் மட்டுமே ரசிகர்கள் செய்து வந்த நிலையில் தெலுங்கு மாநிலங்களில் ரத்தத்தால் அபிஷேகம் செய்தது செய்தது குறித்த வீடியோ இணையத்தில் வெளியானது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து குறிப்பிட்ட நடிகை வேதிகா தனது சமூக வலைதள பக்கத்தில் ’இது மிகவும் கொடியது, அந்த பாவப்பட்ட குழந்தைக்காக எனது இதயம் ரத்தத்தை சிந்துகிறது, இது மிகப்பெரிய சித்திரவதை, மிகப்பெரிய கொடுமை, யாருக்கும் இது நடக்கக்கூடாது.
குரலற்ற அப்பாவியான அந்த ஜீவனை எப்படி வதைக்க முடிகிறது என்றே தெரியவில்லை. அந்த அப்பாவிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். கடவுளின் கைகளில் அது தஞ்சம் அடையட்டும். உன்னை காப்பாற்ற முடியாத எங்களை மன்னித்துவிடு. ரசிகர்கள் கொண்டாட்டம் என்ற பெயரில் ஒரு உயிரை இனியும் கொல்ல வேண்டாம். யாரும் இந்த வன்முறையை ஆதரிக்கப் போவதில்லை. அதனால் இதோடு தயவு செய்து நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட் பதிவாகி வருகிறது.
this is horrific!!! Stop!!! My hearts bleeds for the poor innocent child. No one deserves this…so much torture and trauma !! How on earth can u harm an innocent voiceless being ??? 💔💔💔💔💔 this should never ever happen to any other being ever. I pray for this poor child’s… https://t.co/Ogw2fXh69I
— Vedhika (@Vedhika4u) September 27, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments