close
Choose your channels

நீண்ட இடைவெளிக்கு பின் தமிழில் மீண்டும் வேதிகா .. இந்த பிரபல நடிகருக்கு ஜோடியா?

Thursday, June 1, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் நடிகைகளில் ஒருவர் வேதிகா நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் ஒரு தமிழ் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதிலும் அவர் பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.

தமிழ் திரையுலகில் ’முனி’ ’சக்கரகட்டி’ ‘பரதேசி’ உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை வேதிகா என்பதும் இவர் கடைசியாக தமிழில் ’காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பக்கத்தில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த படத்திற்கு ’பேட்டர் ராப்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. பிரபுதேவா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான ’காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலின் வரிகளை டைட்டிலாக இந்த படத்திற்கும் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு இசை சம்பந்தமான கதையம்சம் கொண்ட படம் என்றும் ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தில் ரொமான்ஸ், ஆக்சன் ஆகியவையும் உண்டு என்று கூறப்படுகிறது.

முதன்முதலாக பிரபுதேவா ஜோடியாக வேதிகா நடிக்க இருக்கும் இந்த படத்தில் பகவதி பெருமாள், விவேக் பிரசன்னா, மைம் கோபி, ரியாஸ் கான் உட்பட பலர் நடிக்கும் இந்த படத்துக்கு டி இமான் இசையமைக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் வரும் 15ஆம் தேதி முதல் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment