'வேதாளம்' டிரைலர் ரன்னிங் டைம்

  • IndiaGlitz, [Tuesday,October 27 2015]

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் நடிப்பில் 'வீரம்' சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேதாளம்' திரைப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் இன்று அல்லது நாளை சென்சார் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வியாழக்கிழமை செண்டிமெண்ட்படி இந்த படத்தின் டிரைலர் வரும் 29ஆம் தேதி அதிகாலை 12 மணிக்கு வெளியாகவுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது வந்த புதிய தகவலின்படி இந்த படத்தின் டிரைலர் 2 நிமிடங்கள் 32 வினாடிகளில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

வெறும் 46 வினாடிகள் மட்டுமே இருந்த 'வேதாளம்' படத்தின் டீசரை உலக சாதனை செய்த அஜீத் ரசிகர்கள், இந்த இரண்டரை நிமிட டிரைலரையும் உலக சாதனை செய்ய வைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜீத், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், கபீர்சிங், சூரி, தம்பிராமையா, ராகுல்தேவ், வித்யூலேகா ராமன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ஏ.எம்.ரத்னம் தயாரித்துள்ள இந்த படம் இதுவரை இல்லாத அளவில் அஜீத் ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.