வேதாளம் பாடல்கள் விமர்சனம்
- IndiaGlitz, [Friday,October 16 2015]
அஜீத் நடிப்பில் அனிருத் இசையமைப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள 'வேதாளம்' படப்பாடல்கள் நேற்று ரிலீஸ் ஆகி அஜீத் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் பாடல்கள் குறித்து தற்போது பார்ப்போம்.
1. வீர விநாயகா வெற்றி விநாயகா சக்தி விநாயகா பேரழகா' என்று தொடங்கும் இந்த பாடல் அனேகமாக அஜீத்தின் அறிமுகப்பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவேகா எழுதிய இந்த பாடலை அனிருத் மற்றும் விஷால் தத்லானி ஆகியோர் பாடியுள்ளனர். அஜீத் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கும் பாடல்களில் இது என்பது குறிப்பிடத்தக்கது.
2.உயிர் நதி கலங்குதே என்ற இந்த பாடலை மெலடி வகையை சேர்ந்தது. பாடலும், பாடலும் வரிகளும் மிக அருமையாக அமைந்துள்ளது. மன நிம்மதியை தரும் பாடல்களில் ஒன்று.
3. ஆலுமா டோலுமா": அஜீத் ரசிகர்களை மீண்டும் ஆட்டம் போட வைக்கும் பாடல். 'டங்காமாரி' புகழ் ரோகேஷ் எழுதிய இந்த பாடலை பாலிவுட் பாட்ஷாவும், அனிருத்தும் இணைந்து பாடியுள்ளார். குத்துப்பாடலுடன் கலந்த ராப் பாடலாக இந்த பாடல் அமைந்துள்ளது.
4. Don't yu Mess with me: ஸ்ருதிஹாசன் மற்றும் சக்த்ஸ்ரீ கோபாலன் பாடிய இந்த பாடல் சூப்பர் ஹிட் டூயட் பாடலாக அமைந்துள்ளது. கார்க்கியின் இளமையான வார்த்தைகளை பாடல் முழுவதும் உணர முடிகிறது. 'எத்தனை நாளைக்குத்தான் நல்லவனைபோல நடிப்பியோ, ரூம் போட்டு யோசித்துதான் என்னோட வாழ்க்கையை கெடுப்பியோ' போன்ற வரிகள் ரசிக்கத்தக்கவை.
5. தெறி மியூசிக் என்றாலா அனிருத் ஞாபகம் வரும் வேளையில் தெறியாக அனிருத் கம்போஸ் செய்த The Theri Theme என்ற இந்த பாடல் நிச்சயம் அனிருத் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு விருந்துதான். 'சினம் கொண்ட மதயானை' என்ற வரிகளுடன் தொடங்கும் இந்த பாடல் கண்டிப்பாக திரையில் தெறியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.