அஜீத்தின் 'வேதாளம்' - ஒரு முன்னோட்டம்
Send us your feedback to audioarticles@vaarta.com
'வீரம்' படத்தை முடித்தவுடன் இயக்குனர் சிவாவின் மீது அதீத நம்பிக்கை வைத்த அஜீத், 'நாம் இருவரும் இணைந்து மீண்டும் படம் பண்ணலாம்' என வாக்கு கொடுத்தாராம். அந்த வாக்கை காப்பாற்றும் படமாக அமைந்ததுதான் அஜீத்-சிவா கூட்டணியின் 'வேதாளம்'
என்னை அறிந்தால்' படத்தின் வெற்றியை அடுத்து மீண்டும் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிக்கும் படம்தான் 'வேதாளம்'. சமீபத்தில் அஜீத்தின் இரு படங்களை தொடர்ச்சியாக யாரும் தயாரித்ததில்லை.
இந்த படத்தின் டீசரை பார்த்த அனைவருமே இது ஒரு ஆக்சன் படம் என்றும் பேய்ப்படம் என்றும் கூறி வருகையில், இந்த படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த ஃபேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அஜீத் இந்த படத்தில் இரண்டு வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில் ஒன்றுதான் 'வேதாளம்' கேரக்டர். இந்த கேரக்டர் படத்தின் பிளாஷ்பேக் காட்சியில் வருவதாகவும், இந்த கேரக்டரின் பெயரையே படத்தின் டைட்டிலாக வைக்கலாம் என அஜீத் பரிந்துரை செய்ததாகவும் கூறப்படுகிறது.
சூரி, மயில்சாமி, லொள்ளு சபா` சாமிநாதன், நான் கடவுள்` ராஜேந்திரன், பால சரவணன், ஆதித்யா டி.வி.` தாப்பா, மகேந்திரன் என ஒரு பெரிய காமெடி கூட்டமே இந்த படத்தில் இருப்பதால் அதிகபட்ச காமெடியை இந்த படத்தில் எதிர்பார்க்கலாம்
அஜீத் நிஜ வாழ்க்கையில் பெண்களை மதிப்பவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் இந்த படத்தில் வரும் லட்சுமி மேனன் கேரக்டர் நிலையில் உள்ள இளம்பெண்கள் தங்களுக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே என ஏங்க வைக்கும் அளவுக்கு அண்ணன் -தங்கை பாசமழை பொழியும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை, கொல்கத்தா, இத்தாலி ஆகிய இடங்களில் பெரும்பாலான காட்சிகளையும், மீதி காட்சிகளை செட் போட்டும் எடுத்துள்ளனர். சென்னையை பொருத்தவரையில் பெரம்பூர் பின்னி மில், மீனம்பாக்கம் பின்னி மில், மோகன் ஸ்டுடியோ, கிண்டி ரேஸ் கோர்ஸ், வடபழனி மலர் ஹாஸ்பிட்டல், ஃபிலிம் சிட்டி, மணி மஹால், தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் ஆகிய இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
இத்தாலியில் அஜீத்-ஸ்ருதிஹாசன் பாடல் ஒன்றும், ஆக்சன் காட்சி ஒன்றும் படமாக்கப்பட்டுள்ளது. இத்தாலி ஆக்சன் காட்சிகளில் அஜித் அதிகபட்ச ரிஸ்க் எடுத்து நடித்துள்ளார்.
''வீர விநாயகா' என்ற பாடல் அஜீத்தின் அறிமுகப்பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் கொல்கத்தாவில் விநாயகர் சதூர்த்தி பூஜை நடைபெறும் நாளில் நடைபெறுவதாக படத்தில் வருகிறது.
முதலில் இந்த படத்தை பொங்கலில் ரிலீஸ் செய்யத்தான் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் முடிவு செய்திருந்தார். ஆனால் அஜீத் கொடுத்த அதிகபட்ச உழைப்பினால் இந்த படம் தீபாவளி ரிலீஸ் சாத்தியமாகியுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் முதல் இறுதிவரை எந்த பிரச்சனையும் இல்லாமல் நடந்து வந்த நிலையில் கடைசி நாளின் படப்பிடிப்பில் அஜீத் எதிர்பாராத வகையில் காயமடைந்தது அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும் வலியை பொருட்படுத்தாமல் அஜீத் கடைசி நாள் படப்பிடிப்பை முடித்து கொடுத்துள்ளார்.
போலந்து நாட்டில் வெளியாகும் முதல் தமிழ்ப்படம் 'வேதாளம்'. இதற்கு முன்னர் எந்த தமிழ்ப்படமும் அங்கு வெளியானதில்லை.
அஜீத் இந்த படத்தில் கொல்கத்தா கால் டாக்சி டிரைவராகவும், இவருடைய முதலாளியாக சூரியும் நடித்துள்ளனர். அஜீத்-சூர்யா காமெடி கெமிஸ்ட்ரி பெரிதாக பேசப்படும் என கூறப்படுகிறது.
'வேதாளம்' திரைப்படம் சென்சாரில் 'யூ' சர்டிபிகேட் பெற்றது மட்டுமின்றி தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையையும் பெற்றுள்ளதால் திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகிஸ்தர்களுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
டிரைலரே வெளியாகாமல் நேரடியாக படம் வெளியாகிறது.
'வேதாளம்' படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்ப்பதற்கு பெருவாரியான சினிமா பிரபலங்களும் விருப்பம் தெரிவித்துள்ளனர். சிம்பு உள்பட பலரை திரையரங்குகளில் முதல் காட்சியில் பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு உள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments