close
Choose your channels

'வேதாளம்' ரீமேக்கில் இரண்டு சூப்பர் ஸ்டார்கள்

Saturday, February 6, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய 'வேதாளம்' திரைப்படம் கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ரூ.125 கோடிக்கும் மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றி பெற்றது என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இந்த படம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன்கல்யாண் நடிப்பில் தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளதாக ஏற்கனவே செய்தி வந்த நிலையில் தற்போது 'வேதாளம்' திரைப்படம் கன்னடத்திலும் ரீமேக் ஆகவுள்ளதாக கூறப்படுகிறது.


'வேதாளம்' திரைப்படத்தின் கன்னட ரீமேக்கில் கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் கன்னட மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழி ரீமேக் படங்களையும் தமிழில் இந்த படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் அவர்களே தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரண்டு படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் நடிக்கவுள்ள அடுத்த படத்தை தயாரிக்கவுள்ள சத்யஜோதி நிறுவனம், இந்த படத்தின் நாயகியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment