'வேதாளம்' இந்தி ரீமேக்.. ரிலீஸ் தேதி அறிவிப்பு.. தமன்னாவுக்கு என்ன கேரக்டர்?
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான ’வேதாளம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 9 ஆண்டுகளுக்கு முன்பே 120 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம் ஹிந்தியில் ’வேதா’ என்ற பெயரில் உருவாகி வரும் நிலையில் அஜித் இடத்தில் ஜான் ஆபிரகாம் நடித்துள்ளார். அதேபோல் ஸ்ருதிஹாசன் வேடத்தில் தமன்னா, லட்சுமிமேனன் மேடத்தில் சர்வாரி வாஹ் என்பவரும் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சற்றுமுன் ஜான் ஆபிரகாம் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூலை 12 என்று அறிவித்துள்ளார். மேலும் ரிலீஸ் தேதியுடன் கூடிய புதிய போஸ்டர் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது
நிகில் அத்வானி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம் தமிழை போலவே இந்தியில் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Dive into the world of #Vedaa.
— John Abraham (@TheJohnAbraham) February 7, 2024
Releasing in cinemas on July 12th! #Sharvari @nowitsabhi @tamannaahspeaks @nikkhiladvani @monishaadvani @madhubhojwani @shariqpatel @minnakshidas @aseem_arora @ZeeStudios_ @EmmayEntertain @johnabrahament @anilandbhanu @ZeeMusicCompany @zeecinema pic.twitter.com/5F4xiOmjrH
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments