டென்மார்க்-பிரான்ஸ் நாடுகளில் வேதாளம் செய்த சாதனை

  • IndiaGlitz, [Monday,November 09 2015]

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, உள்பட பல நாடுகளில் பெருவாரியான திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். மேலும் போலந்து நாட்டில் திரையிடப்படும் முதல் தமிழ்ப்படம் 'வேதாளம்' படம்தான் என்பதையும் பார்த்தோம்.

இந்நிலையில் டென்மார்க் நாட்டில் 'வேதாளம்' திரைப்படம் திரையிடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. டென்மார்க் நாட்டில் இந்த படம் 21 திரையரங்குகளில் திரையிடப்படுவதாகவும், தமிழ்ப்படம் ஒன்று இவ்வளவு அதிகமான திரையரங்குகளில் திரையிடப்படுவது இதுவே முதல்முறை என்றும் கூறப்படுகிறது. இந்த நாட்டில் விஜய்யின் புலி' 20 திரையரங்குகளில் திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் 'வேதாளம்' பிரான்ஸ் நாட்டிலும் முதல் நாளில் 85 காட்சிகள் திரையிடப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸாகி சாதனை செய்து வரும் 'வேதாளம்' வசூலிலும் சாதனை செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

நர்ஸ் வேடத்தில் சிவகார்த்திகேயன்?

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த 'ரஜினிமுருகன்' விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதே ஜோடி மீண்டும் இணையும்...

எனக்கு அக்னிப்பரிட்சை வைக்க வேண்டாம். பிறந்த நாள் விழாவில் கமல் பேச்சு

நேற்று உலக நாயகன் கமல்ஹாசன் தனது 61வது பிறந்த நாளை வெகுசிறப்பாக கொண்டாடினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்....

வேதாளம்: ஏரியாவாரியாக ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் எண்ணிக்கை

வரும் தீபாவளி தினத்தில் வெளிவரும் அஜீத்தின் 'வேதாளம்' படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது...

'வேதாளம்' டிக்கெட்டுக்காக குவிந்த ரசிகர்கள். சென்னை தியேட்டரில் தடியடி

அஜீத் நடித்த 'வேதாளம்' திரைப்படம் வரும் 10ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் இந்த படத்தின் முதல் நாள் டிக்கெட் சென்னையின் அனைத்து திரையரங்குகளிலும் விற்று தீர்ந்துவிட்டது...

3 மாதங்களில் 3 படங்கள் ரிலீஸ்? சாதனை செய்வாரா பாண்டியராஜ்?

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பணி காரணமாக கடந்த சில நாட்களாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் இருந்த விஷால்...