தசரா பண்டிகை கொண்டாட்டம்.. 'வேதா' திரைப்படத்தை பிரீமியர் செய்கிறது ZEE5..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நிகில் அத்வானி இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள ’வேதா, சம்விதன் கா ரக்ஷக்' படத்தில், ஜான் ஆபிரகாம், ஷர்வரி மற்றும் அபிஷேக் பானர்ஜி ஆகியோர் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படம் தற்போது ZEE5 ஓடிடியில் இன்று முதல் ஸ்ட்ரீமிங் ஆகியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதை சொல்லியான ZEE5, அக்டோபர் 10 அன்று ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தினை டிஜிட்டல் பிரீமியர் செய்கிறது. ஜீ ஸ்டுடியோஸ், எம்மே என்டர்டெயின்மென்ட் மற்றும் ஜேஏ என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இப்படத்தினை, முன்னணி இயக்குநர் நிகில் அத்வானி இயக்கியுள்ளார். இந்த அதிரடி திரைப்படத்தில், நடிகர் ஜான் ஆபிரகாம், ஷர்வரி, அபிஷேக் பானர்ஜி, தமன்னா பாட்டியா மற்றும் ஆஷிஷ் வித்யார்த்தி ஆகியோர் நடித்துள்ளனர்.
உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ‘வேதா’ ஒரு உறுதியான தலித் பெண்ணின் பயணத்தை விவரிக்கிறது மற்றும் சாதி அடிப்படையிலான அநீதிகள் மற்றும் குற்றங்களின் அழுத்தமான பிரச்சினைகளைத் தைரியமாகப் பேசுகிறது. இந்த தசரா பண்டிகையில், அக்டோபர் 10 முதல் ZEE5 இல் ஸ்ட்ரீமாகத் தொடங்கும், ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ இன் இந்த உற்சாகமூட்டும் மற்றும் உணர்ச்சிகரமான பயணத்தைத் தவறவிடாதீர்கள்.
வேதா, சம்விதன் கா ரக்ஷக் கதைக்களம் மேஜர் அபிமன்யு கன்வர் [ஜான் ஆபிரகாம்], கோர்ட் மார்ஷியல் ராணுவ அதிகாரியின் பார்வையில் விரிகிறது, நீதிக்கான இடைவிடாத தேடலில் உள்ள உறுதியான தலித் பெண்ணான வேதா [ஷர்வரி] உடன் இணைந்து பயணிக்கிறார் அபிமன்யு. கிராமத்தின் தலைவர் அபிஷேக் பானர்ஜி தலைமையில் இயங்கும் கிராமத்தின் ஆழமான வேரூன்றிய சமூக சவால்களை இருவரும் எதிர்கொள்கின்றனர், அவர்கள் வலிமிகுந்த உண்மைகளை வெளிக்கொண்டு வர பல சக்திகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். இந்த திரைப்படம் இந்த வலி மிகுந்த பயணத்தின் பக்கங்களை காட்டுகிறது.
நிகில் அத்வானியின் இயக்கத்தில், வேதா, சம்விதன் கா ரக்ஷக், திரைப்படத்தில் தீவிரமான ஆக்ஷனுடன் ஒரு தீவிரமான சமூகச் செய்தியும் சிறப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த தசராவில், பார்வையாளர்கள் அக்டோபர் 10 முதல் ZEE5 இல் வேதா, சம்விதன் கா ரக்ஷக் படத்தினை இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் கண்டுகளிக்கலாம்.
ZEE5 இந்தியாவின் தலைமை வணிக அதிகாரி மணீஷ் கல்ரா கூறுகையில்,
'வேதா' சக்தி வாய்ந்த கதை மற்றும் ஆக்கப்பூர்வமான கதைசொல்லல் மூலம் அழுத்தமான சமூகப் பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. இதை ZEE5 உடன் இணைந்து வழங்குவதில் பெருமை கொள்கிறோம். சமூக நியாயம் மற்றும் சாதிய ரீதியலான பிரச்சனைகளைப் பற்றிய அர்த்தமுள்ள உரையாடல்களை 'வேதா' திரைப்படம் பேசும். தரமான, மிகச்சிறப்பான படைப்புகளை வழங்கி வரும் ZEE5 இன் அர்ப்பணிப்புமிக்க பயணத்தில், அவர்களுடன் இணைந்து, இந்த உணர்வுப்பூர்வமான படைப்பை வழங்குவது மகிழ்ச்சி. இப்படைப்பு சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தையும் ஏற்படுத்தும் என நம்புகிறேன்.
ஜீ ஸ்டுடியோவின் CBO, உமேஷ் Kr பன்சால் கூறுகையில், "வேதா' இப்போது ZEE5 இல் வெளியிடப்படுவதால், இந்த வலிமைமிக்க கதை இன்னும் பரந்த பார்வையாளர்களைச் சென்றடையும் என்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உணர்வுப்பூர்வமான கதை மற்றும் வலுவான கருத்துக்கள் இப்படம் மூலம், பார்வையாளர்களிடம் ஆழமாக எதிரொலிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தயாரிப்பாளர், மது போஜ்வானி, எம்மே என்டர்டெயின்மென்ட் கூறுகையில், வேதாவை அதன் ZEE5 டிஜிட்டல் பிரீமியர் மூலம் இன்னும் பெரிய பார்வையாளர்களிடம் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்தப் படத்தைத் தயாரிப்பதற்கான பயணத்தை நாங்கள் தொடங்கியபோது, அதிகாரத்திற்கு எதிரான எளிய மக்களின் பயணத்தைச் சொல்ல வேண்டிய அவசியத்தை உணர்ந்தோம், மேலும் இந்த டிஜிட்டல் வெளியீட்டின் மூலம் இந்த உரையாடலில் மேலும் பலர் இணைவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
இயக்குநர் நிகில் அத்வானி கூறுகையில், ‘வேதா திரைப்படம் பொழுதுபோக்கு மட்டுமல்ல, பல முக்கியமான விஷயங்களையும் வெளிச்சம் போட்டுக் காட்டும் என்று நம்புகிறேன். ஆரம்பம் முதலே, இந்த படத்தின் நோக்கம் அர்த்தமுள்ள உரையாடல்களைத் தூண்டும் என்பதாகவே இருந்தது, Zee5 இல் படத்தின் வெளியீட்டின் மூலம் பார்வையாளர்கள் இதன் ஆழமான செய்தியை உணர்வார்கள் என நம்புகிறேன்.
நடிகர் ஜான் ஆபிரகாம் கூறுகையில், ‘பொழுதுபோக்குடன் மட்டுமின்றி, அதிகாரத்தை கேள்வி கேட்கும் ஒரு படத்தின் பகுதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். வேதா, பெண்கள் தங்கள் வலிமையை தழுவிக்கொள்ள தூண்டுகிறது, மேலும் நம் அனைவரையும் ஒருவரையொருவர் ஆதரிக்கவும் உயர்த்தவும் ஊக்குவிக்கிறது. இன்றைய காலகட்டத்தில் இந்த திரைப்படம் மிகவும் முக்கியமானது மற்றும் அவசியமானது, இது பெண்கள் முன்னேறும் போது, நாம் அனைவரும் முன்னேறுகிறோம் என்பதின் ஒரு சக்திவாய்ந்த நினைவூட்டலாக உள்ளது. ZEE5 இன் பார்வையாளர்கள் வேதாவில் இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் செய்தியை, கண்டுகளிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.
முன்னணி நடிகர் ஷர்வரி கூறுகையில், ‘ZEE5 இல் ‘வேதா’ டிஜிட்டல் ரிலீஸுக்கு ஆவலாக உள்ளேன்! வேதா படத்தில் நடித்தது மிகச்சிறப்பான அனுபவமாக இருந்தது. அவள் சமத்துவத்தையும் நீதியையும் நாடியவள். எழுந்து நின்று போராடும் அவளின் நெஞ்சுரத்தை இந்த பாத்திரத்தில் உணர்ந்தேன். வேதாவுக்காக இவ்வளவு அன்பையும் பாராட்டுக்களையும் பெறுவது மகிழ்ச்சி. உங்களைச் சிந்திக்க வைக்கும் ஒரு படத்தின் ஒரு பகுதியாக இருப்பது எனக்குப் பெருமையாக உள்ளது. குத்துச்சண்டை மற்றும் தற்காப்புக் கலைப் பயிற்சியின் மூலம், வேதா தனது வலிமையையும் குரலையும் படத்தில் வெளிப்படுத்தியுள்ளார். அவளது எழுச்சியூட்டும் பயணத்தைப் பார்வையாளர்கள் கண்டுகளிப்பதைக் காண ஆவலாக இருக்கிறேன்.
அக்டோபர் 10 முதல் ZEE5 இல் பார்வையாளர்கள் ‘வேதா, சம்விதன் கா ரக்ஷக்’ திரைப்படத்தை ஸ்ட்ரீம் செய்யலாம்!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments