'பீஸ்ட்' டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் எதிர்ப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்து வரும் 65வது திரைப்படத்திற்கு ’பீஸ்ட்’ என நேற்று டைட்டில் வைக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதை அடுத்து விஜய் ரசிகர்கள் இந்த டைட்டிலை கொண்டாடி வருகின்றனர். மேலும் திரை உலக பிரபலங்களும் இந்த டைட்டிலுக்கு தங்களது வாழ்த்துக்களை விஜய்க்கும் அவரது படக்குழுவினருக்கும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’பீஸ்ட்’ பட டைட்டிலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரமுகர் வன்னியரசு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன. ஆனால் தமது தாய்மொழியான தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ? மாஸ்டர், பிகில் படங்களை தொடர்ந்து ’பீஸ்ட்’ என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் தமிழில் தான் எடுக்கப்படுகின்றன.ஆனால் தமது தாய்மொழியான#தமிழ் மொழியை மதிக்காமல் தொடர்ந்து ஆங்கிலப்பெயர்களையே வைப்பதன் மர்மம் என்னவோ?Master, Bigil,படங்களை தொடர்ந்து
— வன்னி அரசு (@VanniArasu_VCK) June 22, 2021
#Beast என பெயர் சூட்டி தாய்மொழியை புறக்கணித்து அவமானப்படுத்துவது சரியா?@actorvijay pic.twitter.com/VoqtagIqDY
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments