விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
- IndiaGlitz, [Monday,September 03 2018]
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உடல் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளதாகவும், அதன் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவரது கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.
திருமாவளவன் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள உடல் ஒவ்வாமைக்கு அப்பல்லோ மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், இன்று மாலைக்குள் அவர் வீடு திரும்புவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் திருமாவளவன் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை ஒன்றை அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் இன்னும் சில நிமிடங்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.