எதுக்கு மீன் குழம்பு சட்டியை கழுவனும்? ரஜினிக்கு விசிக எம்பி கேள்வி
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது தனது அரசியல் செயல்பாடு குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்தார். அதில் ஒன்று சிஸ்டத்தை சரி செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் அதனால் பயனில்லை என்றும், சிஸ்டத்தை சரி செய்யாமல் ஆட்சி மாற்றம் நடந்தால் மீன் குழம்பு சட்டியை கழுவாமல் அந்த சட்டியில் சர்க்கரை பொங்கல் வைப்பது போல் ஆகும் என்றும் தெரிவித்தார்.
ரஜினியின் இந்த கருத்து குறித்து விசிக எம்பி டாக்டர் ரவிகுமார் கூறுகையில், ‘ஏன் மீன்குழம்பு வைத்த சட்டியைக் கழுவிவிட்டு பொங்கல் வைக்கவேண்டும்? புதிதாக ஒரு பாத்திரத்தில் வைக்கலாமே! இவரது திட்டத்தை சோதித்துப் பார்க்க ஏன் ஒரு நாட்டை இவர் உருவாக்கக்கூடாது? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் கட்சித் தலைமைக்கு ஒருவர் ஆட்சித் தலைமைக்கு ஒருவர் என்பது இந்திய அளவில் காலகாலமாய் இருப்பதுதானே? மன்மோகன்சிங் பிரதமர், சோனியா காங்கிரஸ் தலைவர். மோடி பிரதமர், நட்டா பாஜக தலைவர். மாநிலங்களிலும்கூட அப்படி இருக்கிறது என்று ரஜினியின் மற்றொரு கருத்துக்கு அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
ஏன் மீன்குழம்பு வைத்த சட்டியைக் கழுவிவிட்டு பொங்கல் வைக்கவேண்டும்? புதிதாக ஒரு பாத்திரத்தில் வைக்கலாமே! இவரது திட்டத்தை சோதித்துப் பார்க்க ஏன் ஒரு நாட்டை இவர் உருவாக்கக்கூடாது? #RajiniFormula
— Dr Ravikumar M P (@WriterRavikumar) March 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments