விடுதலைச்சிறுத்தைகளின் புகாருக்கு பதிலடி கொடுத்த காயத்ரி!

கந்த சஷ்டி கவசம் குறித்த பிரச்சனையில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் கருத்துக்கு பதிலடி கொடுத்த நடிகை காயத்ரி ரகுராமன், ‘மிஸ்டர் திருமாவளவன் அவர்களே! நீங்கள் வேல் குத்தி இருக்கின்றீர்களா? அல்லது பால்காவடி எடுத்து இருக்கின்றீர்களா? அல்லது காவடி எடுத்து இருக்கின்றீர்களா? பெரிதாக பேச வந்து விட்டீர்கள். நீங்கள் திமுகவுக்கு கூஜா தூக்குகிறீர்கள், மதமாற்றம் செய்ய கைநீட்டி காசு வாங்குகிறீர்கள். அதற்காக நீங்கள் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆகிவிடுமா? என்று பேசிய வீடியோ ஒன்று வைரலானது என்பதை சமீபத்தில் பார்த்தோம்.

திருமாவளவன் குறித்து காயத்ரியின் இந்த வீடியோவுக்கு கண்டனம் தெரிவித்த விசிகவினர் இதுகுறித்து காவல்நிலையத்தில் காயத்ரி மீது புகார் அளித்தனர். இந்த புகாருக்கு பதிலடி தரும் வகையில் காயத்ரி ரகுராம் தனது சமூக வலைத்தளத்தில் மீண்டும் ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘என்னுடைய எல்லா போன் அழைப்புகளையும் உங்களுக்கு டைவர்ட் பண்றேன் திருமாவளவன். என்னை மிரட்டும் உங்கள் குண்டர்களுக்கு நீங்களே பதில் சொல்லுங்க என்று கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராமின் இந்த டுவீட்டுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. குறிப்பாக விசிகவினர் தங்களது கடும் கண்டனங்களை காயத்ரிக்கு தெரிவித்து வருகின்றனர்.