தமிழர்களுக்கு எதிராக செயல்படும் வாட்டாள் நாகராஜ் டெபாசிட் இழப்பு
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/play-spl.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igplunmute.png)
Send us your feedback to audioarticles@vaarta.com
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-like.png)
![](https://d1pyuwmru9u39x.cloudfront.net/images/player/igpl-dislike.png)
நம்மூரில் ஒருசில லட்டர்பேட் அரசியல் கட்சி தலைவர்கள் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பிரிவினைவாதம் ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்காததால் தேர்தலில் டெபாசிட் கூட வாங்க முடியாத நிலை தான் உள்ளது.
இதேபோல் தமிழர்கள், கன்னடர்கள் என பிரிவினைவாதம் செய்து தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருபவர் கன்னட சலுவாலி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ். இவர் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சாம்ராஜ்நகர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் இவருக்கு வெறும் 5977 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. இதனால் இவர் டெபாசிட் இழந்தார். இந்த தொகுதியில் பாஜக கட்சியின் வேட்பாளர் மல்லிகார்ஜுனப்பா 71050 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்
பிரிவினைவாத அரசியல் செய்பவர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் நல்ல பாடத்தை கற்று கொடுப்பார்கள் என்பது வாட்டாள் நாகராஜ் தோல்வி மூலம் மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments