தல அஜித்தை நினைத்து பாருங்கள்: தமிழ் சினிமாவின் 'சுஷாந்த்சிங் ராஜ்புத்'களுக்கு இளையராஜா மகள் அறிவுரை

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த்சிங் கடந்த ஞாயிறு அன்று மன அழுத்தம் காரணமாக தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்யப்பட்ட விவகாரம் ஒரு வாரம் ஆகியும் இன்னும் சமூக வலைதளங்களில் விவாத பொருளாக ஆகி வருகிறது.

சுஷாந்தின் மன அழுத்தத்திற்கு காரணம் அவர் பாலிவுட் பிரமுகர்களால் புறக்கணிக்கப்பட்டதுதான் என்றும் அவருக்கு வரக்கூடிய வாய்ப்புகள் மறுக்கப்பட்டன என்றும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர். இது குறித்து சுஷாந்த்சிங்கின் ரசிகர்கள் முன்னணி நடிகர்கள் மீது குற்றம்சாட்டி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பாலிவுட்டில் இருக்கும் சுஷாந்த் சிங் போல் தமிழ் சினிமாவிலும் ஒதுக்கப்படும் பலர் உள்ளனர் என்றும் அவர்களில் சிலர் என்னிடம் வருத்தப்படுவார்கள் என்றும் சிலர் அமைதியாக சிரித்துக் கொண்டே புறக்கணிப்பின் வலியை கடந்து செல்வார்கள் என்றும் இளையராஜாவின் அண்ணன் மகள் வாசுகி பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

’மேலும் அவர்களிடம் நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான். தல அஜித் அவர்களின் அன்றைய நிலையையும் இன்றைய நிலையையும் எண்ணி பாருங்கள்’ என்று வாசுகி பாஸ்கர் கூறியுள்ளார். வாசுகி பாஸ்கரின் இந்த டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.