எனது தந்தை கொரோனாவால் மரணம் அடையவில்லை: நடிகர் விஜய் வசந்த் பேட்டி

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்பியும், பிரபல தொழிலதிபரும் நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் நேற்று மாலை மரணம் அடைந்தார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் வசந்த் தனது தந்தையின் மரணம் குறித்து அளித்த பேட்டியில் ’தனது தந்தை கொரோனாவால் மரணம் அடையவில்லை என்றும் அவர் மரணத்துக்கு முன்பாகவே கொரோனாவில் குணமாகி விட்டார் என்றும் கூறினார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது ’எனது தந்தை நேற்று மாலை 6.56 மணிக்கு காலமானார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலம் இல்லாமல் இருந்த நிலையில் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடினார்கள். நேற்று மாலை திடீரென அவரது உடல் கவலைக்கிடமாக இருந்ததால் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை என்று கூறினார். மேலும் எனது தந்தை வசந்தகுமார் அவர்களின் இழப்பு எனக்கு மட்டுமின்றி அவர் மீது மரியாதை வைத்திருந்த அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும் என்றார்.

மேலும் வசந்தகுமார் அவர்கள் மரணத்துக்கு முன்னரே கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டார் என்றும் அவருக்கு கடைசியாக செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். கொரோனாவில் இருந்து குணமானாலும் வேறு சில செகண்டரி நோய்களால் அவர் மரணம் அடைந்தார் என்பதையும் விஜய் வசந்த் உறுதி செய்தார்.

இந்த நிலையில் வசந்தகுமார் கொரோனாவால் மரணம் அடையவில்லை என்பதால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் இறுதிச்சடங்கில் பொது மக்கள் கலந்து கொள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வசந்தகுமார் அவர்களின் உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவருடைய திநகர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு இருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் அவரது வீட்டின் முன் கூடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

வசந்தகுமார் மறைவுக்கு கமல், ரஜினி, பிரபு இரங்கல்!

பிரபல தொழிலதிபரும் கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்பியுமான வசந்தகுமார் நேற்று மாலை மறைவடைந்த நிலையில் அவரது மறைவிற்கு

ஆளுனராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுகிறேன்: வசந்தகுமார் மறைவு குறித்து தமிழிசை

நேற்று மறைந்த காங்கிரஸ் எம்பி வசந்தகுமார் அவர்கள் பழம்பெரும் அரசியல்வாதி குமரி அனந்தனின் சகோதரர் என்பதும், அவருடைய மகளும் தெலுங்கானா ஆளுனருமான தமிழிசை  செளந்தராஜன் அவர்களின் சித்தப்பா

உலகின் அதிகவேகமான மனித கால்குலேட்டர்… 20 வயதில் சாதனை படைத்த இந்திய இளைஞர்!!!

பெங்களூரைச் சேர்ந்த சகுந்தலா தேவி உலகின் அதிகவேக மனிதக் கால்குலேட்டராகச் செயல்பட்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து இருந்தார்.

ஐபிஎல் விளையாட சென்ற சிஎஸ்கே அணியில் கொரோனாவா? பரபரப்புத் தகவல்!!!

கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகளை இந்தியாவில் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது

வடகொரியாவில் நடக்கும் அரசியல் மர்மங்கள்!!! பதற வைக்கும் பின்னணி!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார்.