எனது தந்தை கொரோனாவால் மரணம் அடையவில்லை: நடிகர் விஜய் வசந்த் பேட்டி
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னியாகுமாரி காங்கிரஸ் எம்பியும், பிரபல தொழிலதிபரும் நடிகர் விஜய் வசந்தின் தந்தையுமான வசந்தகுமார் நேற்று மாலை மரணம் அடைந்தார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது
இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் நடிகர் விஜய் வசந்த் தனது தந்தையின் மரணம் குறித்து அளித்த பேட்டியில் ’தனது தந்தை கொரோனாவால் மரணம் அடையவில்லை என்றும் அவர் மரணத்துக்கு முன்பாகவே கொரோனாவில் குணமாகி விட்டார் என்றும் கூறினார்
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது ’எனது தந்தை நேற்று மாலை 6.56 மணிக்கு காலமானார். அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல் நலம் இல்லாமல் இருந்த நிலையில் அவரை காப்பாற்ற மருத்துவர்கள் தீவிரமாகப் போராடினார்கள். நேற்று மாலை திடீரென அவரது உடல் கவலைக்கிடமாக இருந்ததால் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரை காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்சி செய்தும் முடியவில்லை என்று கூறினார். மேலும் எனது தந்தை வசந்தகுமார் அவர்களின் இழப்பு எனக்கு மட்டுமின்றி அவர் மீது மரியாதை வைத்திருந்த அனைவருக்கும் ஒரு பேரிழப்பாகும் என்றார்.
மேலும் வசந்தகுமார் அவர்கள் மரணத்துக்கு முன்னரே கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டார் என்றும் அவருக்கு கடைசியாக செய்யப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார். கொரோனாவில் இருந்து குணமானாலும் வேறு சில செகண்டரி நோய்களால் அவர் மரணம் அடைந்தார் என்பதையும் விஜய் வசந்த் உறுதி செய்தார்.
இந்த நிலையில் வசந்தகுமார் கொரோனாவால் மரணம் அடையவில்லை என்பதால் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தவும் இறுதிச்சடங்கில் பொது மக்கள் கலந்து கொள் அனுமதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி வசந்தகுமார் அவர்களின் உடல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவருடைய திநகர் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகவும் காங்கிரஸ் கொடி போர்த்தப்பட்டு இருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் அவரது வீட்டின் முன் கூடியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
"அப்பா மீது அன்பு வைத்திருந்த அனைவருக்கும் பெரும் இழப்பு" - மகன் விஜய் வசந்த் உருக்கம்#HVasanthakumar | #RipVasanthakumar https://t.co/5dM6uxphVY
— Thanthi TV (@ThanthiTV) August 28, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com