சமூக விலகல் ஒரே நாளில் கேள்விக்குறியாகிவிட்டது: பிரபல இயக்குனர் வருத்தம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை உள்பட 5 நகரங்களில் நாளை முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அரசு அறிவித்ததும், இன்று காலை முதல் பொதுமக்கள் சமூக விலகலை கேள்விக்குறியாக்கி கடைகளில் குவிந்தனர். கொரோனா தொற்று குறித்த எந்த பயமும் இன்றி சாப்பாட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதில் அவர்கள் கவனம் இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இதுகுறித்து பிரபல இயக்குனர் வசந்தபாலன் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் கூறியதாவது: நாளை முதல் அடுத்த நான்கு நாட்கள் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் முழு ஊரடங்கு என்ற அரசின் திடீர் அறிவிப்பு நேற்றிரவு முதல் பெரும் பதட்டத்தை உண்டாக்கி விட்டது. காலை சென்னை கேகே நகரில் உள்ள அனைத்து சிறு பெரு மளிகை கடைகளும் காய்கறி கடைகளும் நிறைந்து வழிந்தன. போக்குவரத்து நெரிசலே ஏறபட்டுவிட்டது. கொரோனோ நம்மை தாக்கிவிடும் என்கிற பயத்தை மறந்து இந்த நான்கு நாட்கள் நமக்கு உணவு எதுவும் கிடைக்காமல் போய்விடப்போகிறது என்கிற பதட்டமே மக்களிடம் மேலோங்கி இருப்பதைக் கண்டேன்.
காலை 830 மணிக்கு சிறிய காய்கறிக்கடை ஒன்றில் வரிசையில் நின்றேன். ஐம்பது பேருக்கு மேல் கூட்டம் நிறைந்து வழிந்தது. கிட்டத்தட்ட இரண்டு மணிநேரம் வரிசையில் நின்றேன். மக்கள் வாங்கிக் குவித்தார்கள். மிஞ்சிய காய்களை வாங்கி விட்டு வீடடைந்தேன். இத்தனை நாள் நாம் கடைப்பிடித்த சமூகவிலகல் மற்றும் ஒழுங்கு இன்று ஒருநாள் கேள்விக்குரியதாக மாறிவிட்டது என்பது தான் வருத்தம் தருகிறது. இவ்வாறு இயக்குனர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout