close
Choose your channels

'அஸ்வின்ஸ்' இரண்டாம் பாகம் வருகிறதா? நடிகர் வசந்த் ரவி தகவல்..!

Saturday, July 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள வசந்த் ரவி நடித்த ’அஸ்வின்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ’அஸ்வின்ஸ்’ படம் குறித்து கருத்து கூறிய ஹீரோ வசந்த் ரவி ’அஸ்வின்ஸ்’ திரைப்படம் வித்தியாசமான படம் என்பதால் மக்களுக்கு பிடித்து உள்ளது என்றும் சென்னை கோவை உள்ளிட்ட ஒரு சில ஊர்களுக்கு நானே தியேட்டருக்கு சென்று விசிட் செய்தேன் என்றும் மக்களுடன் பேசியபோது இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பதை புரிந்து கொண்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் அஸ்வின் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

வசந்த் ரவி, விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தருண் தேஜா இயக்கத்தில் விஜய் சித்தார்த் இசையில் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு எட்வின் சாகே ஒளிப்பதிவும், வெங்கட்ராஜன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. ‘அஸ்வின்ஸ்’ என்றால் இரட்டை குதிரை முகம் கொண்ட கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment
Related Videos