'அஸ்வின்ஸ்' இரண்டாம் பாகம் வருகிறதா? நடிகர் வசந்த் ரவி தகவல்..!

  • IndiaGlitz, [Saturday,July 08 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் 'ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள வசந்த் ரவி நடித்த ’அஸ்வின்ஸ்’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் ’அஸ்வின்ஸ்’ படம் குறித்து கருத்து கூறிய ஹீரோ வசந்த் ரவி ’அஸ்வின்ஸ்’ திரைப்படம் வித்தியாசமான படம் என்பதால் மக்களுக்கு பிடித்து உள்ளது என்றும் சென்னை கோவை உள்ளிட்ட ஒரு சில ஊர்களுக்கு நானே தியேட்டருக்கு சென்று விசிட் செய்தேன் என்றும் மக்களுடன் பேசியபோது இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்பதை புரிந்து கொண்டேன் என்றும் தெரிவித்தார்.

மேலும் அஸ்வின் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக வாய்ப்பிருக்கிறது என்றும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் அவர் கூறினார்.

வசந்த் ரவி, விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தருண் தேஜா இயக்கத்தில் விஜய் சித்தார்த் இசையில் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு எட்வின் சாகே ஒளிப்பதிவும், வெங்கட்ராஜன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் வெளியாகியுள்ளது. ‘அஸ்வின்ஸ்’ என்றால் இரட்டை குதிரை முகம் கொண்ட கடவுள் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஸ்டைலிஷ் லுக்கில் நடிகர் சூரி.. வேற லெவல் புகைப்படங்கள்..!

கோலிவுட் திரை உலகின் முன்னணி நடிகர்கள் தற்போது கெட்டப்பை மாற்றி வரும் வாரமாக இந்த வாரம் உள்ளது. ஏற்கனவே தனுஷ் மொட்டை தலையுடன் வித்தியாசமான கெட்டப்பில் இருந்த நிலையில் சியான்

காஷ்மீரில் செம்ம ஜாலி மூடில் சாய் பல்லவி.. வைரல் புகைப்படங்கள்..!

நடிகை சாய் பல்லவி காஷ்மீரில் செம்ம ஜாலி மூடில் இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்களுக்கு ஏழு லட்சத்திற்கும் அதிகமாக லைக்ஸ் குவிந்துள்ளது.

நெகட்டிவ் கேரக்டரில் நடித்த படம் எல்லாம் சூப்பர் ஹிட்.. சிம்பு எடுத்த அதிரடி முடிவு..!

நடிகர் சிம்பு நெகட்டிவ் கேரக்டரில் நடித்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் அவர் அடுத்த படத்திலும் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

அஜித் இப்போது எந்த நாட்டில் இருக்கிறார் தெரியுமா? 'விடாமுயற்சி' எப்போது ஆரம்பிக்கும்?

அஜித் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாக இருக்கும் 'விடாமுயற்சி' என்ற படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வந்த போதிலும் இந்த படம் குறித்து மற்ற தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

லோகேஷின் அடுத்த படத்தில் சியான் விக்ரமா? இது நம்ம லிஸ்ட்லேயே இல்லையே..!

தளபதி விஜய் நடித்துவரும் 'லியோ' என்ற படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்திருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் தொழில்நுட்ப  பணிகளில் பிஸியாக உள்ளார் என்பது தெரிந்ததே.