வசந்த் ரவியின் 'அஸ்வின்ஸ்' ரிலீஸ் தேதி அறிவிப்பு..! அதே தேதியில் ரிலீஸாகும் 2 படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வரும் ’ஜெயிலர்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ‘அஸ்வின்ஸ்’. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
‘அஸ்வின்ஸ்’ திரைப்படம் ஜூன் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தை சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜூன் 9ஆம் தேதி சித்தார்த் நடித்த ’டக்கர்’ மற்றும் சரத்குமார், அசோக் செல்வன் நடித்த ’போர் தொழில்’ ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது ‘அஸ்வின்ஸ்’ படமும் அதே தேதியில் இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வசந்த் ரவி, விமலா ராமன், சிம்ரன் பரீக், முரளிதரன், சரஸ்வதி மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் தருண் தேஜா இயக்கத்தில் விஜய் சித்தார்த் இசையில் உருவாகி உள்ளது. இந்த படத்திற்கு எட்வின் சாகே ஒளிப்பதிவும், வெங்கட்ராஜன் படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர். தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் இந்த படம் உருவாகியுள்ளது. ‘அஸ்வின்ஸ்’ என்றால் இரட்டை குதிரை முகம் கொண்ட கடவுள் என பொருள் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
.@sakthifilmfctry’s magic touch brings 'ASVINS' to TN theatres on June 9
— SVCC (@SVCCofficial) May 20, 2023
Produced by @SVCCofficial, Starring @iamvasanthravi, Directed by @taruntejafilm@BvsnP @praveen2000 @Vimraman @immuralidaran @Sarasmenon @GA_StudiosOffl @udhaya_deep @actor_malina pic.twitter.com/S3Ralmt7BT
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments