உலகத்தில இருக்குற எந்த ஆயுதத்தையும் வைத்து அவனை கொல்ல முடியாது: 'வெப்பன்' டீசர்..!

  • IndiaGlitz, [Thursday,August 10 2023]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள வசந்த் ரவி ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் ’வெப்பன்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டீசர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

ஒரு அபூர்வ சக்தி கொண்ட மனிதனை அழிக்க எடுக்கும் முயற்சியும் அந்த முயற்சி பலித்ததா என்பதும் தான் இந்த படத்தின் கதை என்பது இந்த டீசரில் இருந்து தெரிய வருகிறது.

இந்த உலகத்தில் இருக்கிற எந்த ஆயுதத்தை வைத்தும் அவனை கொல்ல முடியாது ஏனென்றால் அவன் ஒரு சூப்பர் ஹியூமன் என்ற வசனம் இந்த படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

சத்யராஜ், வசந்த் ரவி, ராஜீவ் மேனன், தன்யா ஹோப், யாஷிகா ஆனந்த், மைம் கோபி, உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தை குகன் சென்னியப்பன் இயக்கி உள்ளார். ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதியை விரைவில் படக்குழுவினர் அறிவிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது