வாசன் ஐகேர் மருத்துவமனை அருண் மரணத்தில் மர்மமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
வாசன் ஐகேர் மருத்துவமனைகளின் உரிமையாளர் அருண் அவர்கள் நேற்று திடீரென மாரடைப்பு காரணமாக இறந்ததாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவருக்கு வயது 51.
திருச்சியில் முதலில் மெடிக்கல் ஷாப் மூலம் தனது பணியை துவங்கிய அருண், அதன் பின்னர் திருச்சியில் கண் மருத்துவமனை ஒன்றை ஆரம்பித்தார். தற்போது அது விஸ்வரூபமாக வளர்ந்து இந்தியா முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் 100 கண் மருத்துவமனைகள் மற்றும் வாசன் பல் மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. இவருடைய மருத்துவமனைகளில் 600 மருத்துவர்களும் 6 ஆயிரம் ஊழியர்களும் பணிபுரிகின்றனர் என்பதும் உலகிலேயே மிக அதிகமான நபர்களுக்கு கண் சிகிச்சை செய்த மருத்துவமனை என்ற பெருமை இவருடைய மருத்துவமனைகளுக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நேற்று காலை திடீரென அருணுக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, அதன் பின்னர் மாலை அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அருண் அவர்களின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ஒரு சில உறவினர்கள் மற்றும் நண்பர்கள் புகார் அளித்ததை அடுத்து இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். முதல்கட்ட போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் இந்த மரணம் தற்கொலை அல்லது கொலை இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு இருந்தாலும் விரிவான போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகே அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments