'வருஷமெல்லாம் வசந்தம்' ஹீரோ போலவே  இயக்குனரும் தூக்கிட்டு தற்கொலை.. என்ன காரணம்?

  • IndiaGlitz, [Saturday,July 13 2024]

’வருஷமெல்லாம் வசந்தம்’ என்ற திரைப்படத்தில் ஹீரோக்களில் ஒருவராக நடித்த குணால் என்பவர் சில ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இந்த படத்தின் இயக்குநரும் இன்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜாவின் மகன் மனோஜ், குணால், அனிதா, நம்பியார் உள்பட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் ’வருஷமெல்லாம் வசந்தம்’. இந்த படத்தில் சிற்பி இசையமைத்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் நாயகர்களில் ஒருவரான குணால் கடந்த 2008 ஆம் ஆண்டு தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இயக்குனர் ரவிசங்கர் என்பவரும் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் அவரது கேகே நகர் வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாகவும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக இயக்குனர் ரவிசங்கருக்கு திரைப்பட வாய்ப்பு கிடைக்காததால் விரக்தியாக இருந்ததாகவும், அதனால் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 

More News

லைட்டா தலைவர் சாயல் தெரியுதே: அட.. நம்ம சூரியா.. மதுரை டு லாஸ் ஏஞ்சல்ஸ்..

நடிகர் சூரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு லைட்டா தலைவர் சாயல் தெரியுதே

சமையல் அறையில் நச்சு பொருட்களை வைத்துள்ளோம்.. பிரேம்ஜி மனைவியின் அதிர்ச்சி பதிவு..!

நடிகர் மற்றும் இசையமைப்பாளர் பிரேம்ஜியின் மனைவி இந்து தனது சமூக வலைதளத்தில் சமையல் அறையில் நாம் வைத்திருக்கும் பெரும்பாலான பொருட்கள் உடலுக்கு

'கைதி 2' படத்தில் நிச்சயம் LCU படம் தான்.. யார் யார் இருக்கிறார்கள்?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியாகி

'இந்தியன் 2' முதல் நாள் வசூல் எவ்வளவு? 'விக்ரம்' முதல் நாள் வசூலை முறியடித்ததா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'இந்தியன் 2' திரைப்படம் நேற்று வெளியான நிலையில் இந்த படத்திற்கு பெரும்பாலும் கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன

'நான் என்ன சீரியல் கில்லரா? பிரசாந்த் நடித்த 'அந்தகன்' டீசர்..!

பிரசாந்த் நடித்த 'அந்தகன்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டதாக கூறப்படும் நிலையில் தற்போது தான் இந்த படத்தை ரிலீஸ் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டது.