தளபதி விஜய்யை சந்தித்த ஐபிஎல் ஹீரோ: வைரலாகும் புகைப்படம்!

  • IndiaGlitz, [Tuesday,November 17 2020]

சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்திய இளம் வீரர்கள் பலர் அடையாளம் காணப்பட்டனர் என்பது தெரிந்ததே. குறிப்பாக ருத்ராஜ் கெய்க்வாட், நடராஜன், படிக்கல், ராகுல் திவெட்டியா உள்பட பல வீரர்களின் திறமைகள் வெளிப்பட்டது என்பதால் அவர்கள் எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெற வாய்ப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அந்த வகையில் ஐபிஎல் போட்டிகளில் தனது திறமையை நிரூபித்த இளம் வீரர்களில் ஒருவர் வருண் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தை சேர்ந்த இவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா அணியில் விளையாடினார். என்பதும் இவரது பந்துவீச்சு மிகவும் அற்புதமாக இருந்தது என்பதும் குறிப்பாக டெல்லி அணிக்கு எதிராக நடந்த போட்டி ஒன்றில் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அன்றைய போட்டியின் ஹீரோ ஆனார் வருண் சக்கரவர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகர் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் தளபதி விஜய்யை வருண் நேரில் சந்தித்து உள்ளார். இந்த சந்திப்பின் போது எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தளபதி விஜயின் அலுவலகத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது கிரிக்கெட் மற்றும் சினிமா குறித்து இருவரும் பேசியதாகவும் தெரிகிறது. ஏற்கனவே வருண் சக்கரவர்த்தியின் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட திரைப்படமான ’ஜீவா’ என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி இணைந்திருந்தார் என்பதும் ஆனால் துரதிர்ஷ்டவசமாக காயம் காரணமாக விலகினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.