ஜிவி பிரகாஷ்-கவுதம் மேனன் படத்தில் நாயகியாகும் 'பிகில்' நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகரும் இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் ஒரே நேரத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒருசில படங்கள் ரிலீசுக்கு தயாராக இருப்பதும் தெரிந்ததே.. கொரோனா வைரஸ் பிரச்சனை முடிந்த பின்னர் இந்த படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் என்பவர் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷ் நாயகனாகவும், இந்த படத்தில் பிரபல இயக்குனர் கவுதம் மேனன் வில்லனாகவும் நடிக்க உள்ளதாக வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தில் தற்போது நாயகியாக நடிக்கும் நடிகை குறித்த தகவல் வெளிவந்துள்ளது. தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘பிகில்’ படத்தில் காயத்ரி சுதர்சன் என்ற முக்கிய கேரக்டரில் நடித்த வர்ஷா பொல்லம்மா தான் இந்த படத்தின் நாயகி என்ற தகவல் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே விஜய்சேதுபதியின் ‘96’ படம் உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. டிஜி பிலிம் கம்பெனி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஊரடங்கு உத்தரவு முடிவுக்கு வந்த பின் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments