தளபதி விஜய்யின் 'வாரிசு': சென்சார் மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’: திரைப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் இந்த படம் நேற்று சென்சார் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் ‘வாரிசு’: படத்திற்கு சென்சார் அதிகாரிகள் 'யு’ சான்றிதழ் கொடுத்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரைலர் நாளை மாலை 5 மணிக்கு சன் டிவியின் சமூக வலைத்தளபக்கத்தில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனையடுத்து ‘வாரிசு’: திரைப்படத்தின் டிரைலரை எதிர்நோக்கி விஜய்யின் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘வாரிசு’: திரைப்படம் ஜனவரி 12-ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் சரியாக ஒரு வாரத்திற்கு முன்னர் டிரைலர் வெளியாக உள்ளதால், இந்த ட்ரெய்லர் படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
#VaaThalaivaa it’s time for #VarisuTrailer 🔥
— Sri Venkateswara Creations (@SVC_official) January 3, 2023
Releasing Tomorrow at 5 PM on @SunTV YouTube channel 💥
See ‘U’ soon nanba 😁#VarisuGetsCleanU#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @iamRashmika @7screenstudio @TSeries #Varisu #VarisuPongal pic.twitter.com/OAm0gBhV48
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments