'வாரிசு' மொத்த வசூல் எவ்வளவு.. தயாரிப்பாளரின் அதிகாரபூர்வ அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது என்பதும் இந்த படம் ஆரம்பம் முதலே மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலை வாரி குவித்தது என்பதையும் பார்த்தோம்.
இரண்டே வாரங்களில் இந்த படம் 200 கோடி ரூபாய் என்ற வசூலை எட்டிய நிலையில் தற்போது இந்த படத்தின் வசூல் குறித்த நிலவரங்களை தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தனது பக்கத்தில் தெரிவித்துள்ளது.
'வாரிசு’ திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. படம் ரிலீஸ் ஆகி இன்னும் ஒரு மாதம் கூட முழுவதுமாக ஆகாத நிலையில் 300 கோடி ரூபாய் வசூல் என்பது மிகப்பெரிய சாதனை என்பதும் இன்னும் பல திரையரங்குகளில் 60 முதல் 70% பார்வையாளர்களுடன் 'வாரிசு’ படம் திரையிடப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
300 கோடில் கிளப்பில் 'வாரிசு’ படம் இணைந்ததை அடுத்து விஜய் ரசிகர்கள் இதனை கொண்டாடி வருகின்றனர். இதற்கு முன்னர் விஜய்யின் அடுத்த ’பிகில்’ திரைப்படம் 300 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Aatanayagan ON DUTY 🔥#MegaBlockbusterVarisu officially enters the 300Crs worldwide gross collection club now 🤩#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @MusicThaman @7screenstudio @TSeries #Varisu#VarisuCrosses300CrsWWGross pic.twitter.com/A4K1yLeD4E
— Sri Venkateswara Creations (@SVC_official) February 6, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com