close
Choose your channels

பிறந்த நாள் கொண்டாடும் 'வாரிசு' ரஞ்சிதம் .. குவியும் ரசிகர்களின் வாழ்த்து!

Sunday, January 8, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரஞ்சிதமே’ என்ற பாடலை விஜய்யுடன் பாடிய எம்எம் மானசி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில், தமன் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாரிசு’. இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு பாடல் ’ரஞ்சிதமே’. இந்த பாடலை விஜய்யுடன் பாடிய பாடகி மானசி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மானசி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் ’வாரிசு’ இசை வெளியீட்டின் விழாவின்போது அவர் பாடிய ரஞ்சிதமே பாடலின் வீடியோக்களையும் அவர் பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

குறிப்பாக ’வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென அவரது மைக் வேலை செய்யாத நிலையில் விஜய் மேடை ஏறி வந்து அவருக்கு மைக் கொடுத்தது தன்னுடைய வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவம் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment