close
Choose your channels

ஐதராபாத் செல்லும் விஜய்.. தெலுங்கிலும் ஒரு குட்டிக்கதை உண்டா?

Monday, December 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் சமீபத்தில் மிக பிரமாண்டமாக நடந்தது என்பதும் இந்த விழாவில் பேசிய குட்டி கதை, என் நெஞ்சில் குடியிருக்கும் மற்றும் தனது போட்டியாளர் என அரை மணி நேரம் பேசி விஜய் அசத்தினார் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் அடுத்தகட்ட புரமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற இருப்பதாகவும் சென்னை போன்ரேஏ அங்கும் பிரமாண்டமாக புரமோஷன் விழா நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் ஐதராபாத்தில் நடைபெறும் புரமோஷன் விழாவில் பிரபல தெலுங்கு நடிகர்களும் கலந்து கொள்ள வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. ’வாரிசு’ இசை வெளியீட்டு விழாவில் இரண்டு கதைகளை கூறி அசத்திய விஜய் ஐதராபாத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் தெலுங்கில் குட்டி கதை சொல்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இந்த நிலையில் ஜனவரி 1ஆம் தேதி ’வாரிசு’ படத்தின் டீசர் அல்லது ட்ரெய்லர் வர வாய்ப்பிருப்பதாக ’வாரிசு’ படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment