'வாரிசு' படத்தின் அடுத்த சிங்கிள் பாடல்: பாடியவர் இந்த பிரபலமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் அது மட்டுமின்றி இன்னொரு பக்கம் புரமோஷன் பணிகளும் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே
இந்த படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் தற்போது மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
’வாரிசு’ படத்தில் இடம் பெற்ற மூன்றாவது சிங்கிள் பாடலான Soul Of Varisu என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை பிரபல பின்னணி பாடகி சித்ரா பாடிய உள்ளதாகவும் பாடலாசிரியர் விவேக் இந்த பாடலை எழுதி உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியாகவுள்ளது.
#SoulOfVarisu - #VarisuThirdSingle is releasing Tomorrow at 5 PM ??
— Sri Venkateswara Creations (@SVC_official) December 19, 2022
??️ @KSChithra mam
?? @MusicThaman
??️ @Lyricist_Vivek#Thalapathy @actorvijay sir @SVC_official @directorvamshi @iamRashmika @7screenstudio @TSeries #BhushanKumar #KrishanKumar #ShivChanana#Varisu #VarisuPongal pic.twitter.com/VPDXO5uD4P
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments