3 வாரத்தில் ரூ.300 கோடியை நெருங்கு வசூல்.. 'வாரிசு' படக்குழுவினர் குஷி!
Send us your feedback to audioarticles@vaarta.com
பொங்கல் விருந்தாக ஜனவரி 11ஆம் தேதி வெளியான தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் முதல் நாளில் இருந்தே பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று குடும்பங்கள் போற்றும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இந்த படம் ரிலீசாகி 3 வாரங்கள் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது 300 கோடி ரூபாய் வசூலை நெருங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது என்பதும் மூன்றாவது வாரத்தில் பல திரையரங்குகளில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் ஓசூர் லட்சுமி தேவி திரையரங்கில் 17 நாட்களை தாண்டியும் ஹவுஸ்புல் காட்சிகளாக ‘வாரிசு’ ஓடிக்கொண்டு இருக்கிறது. பாண்டிச்சேரி பிவிஆர் திரையரங்கில் மற்ற திரைப்படங்களை விட இரு மடங்கு அதிகமான காட்சிகள் வாரிசு படத்திற்காக திரையிடப்பட்டு வருகின்றன.
திருச்சி மரியம் திரையரங்கில் இதுவரை விக்ரம் படத்திற்கு தான் அதிக எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் வருகை (footfall) தந்தனர் என்கிற சாதனை இருந்து வந்தது. அதை ‘வாரிசு’ திரைப்படம் முறியடித்து தற்போது அதிகப்படியான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.
அதேபோல திருநின்றவூர் வேலா சினிமாஸ், அறந்தாங்கி விஎஸ் திரையரங்கம் ஆகியவற்றிலும் ‘வாரிசு’ படத்திற்கு அதிகப்படியான பார்வையாளர்கள் வருகை தந்துள்ளனர். ஈரோடு பள்ளிபாளையம் ஜெயலட்சுமி சினிமாஸ் திரையரங்கிலும் மூன்றாவது வாரத்தில் வாரிசு திரைப்படத்திற்கு பார்வையாளர்களின் எண்ணிக்கை சற்றும் குறையாமல் இருந்து வருகிறது.
படம் வெளியான 16 நாட்களில் இந்தியாவில் மட்டும் 193.94 கோடியும் வெளிநாடுகளில் 10.01 மில்லியன் டாலர்களும் உலகம் முழுவதும் மொத்தமாக 275.69 கோடியும் வசூலித்துள்ளதாக வர்த்தக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் ‘வாரிசு’ படத்தின் வசூல் 300 கோடியை தாண்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com