இது 'துணிவு' படத்துடன் ஒப்பிடும் பதிவல்ல', போட்றா பிஜிஎம் ஆ' : 'வாரிசு' பிரபலம் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
இது ‘துணிவு’ படத்துடன் ஒப்பிடும் பதிவல்ல என்றும் அந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள் என்று ‘வாரிசு’ படத்தின் பிரபலம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
அஜீத் நடித்த ‘துணிவு’ மற்றும் விஜய் நடித்த ‘வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது. இந்த நிலையில் இருபடங்களும் வெளியாகி ஒரு வாரம் ஆகி உள்ள நிலையில் ‘வாரிசு’ திரைப்படம் ரூபாய் 210 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அதேபோல் ‘துணிவு’ திரைப்படமும் 200 கோடி வசூலை தாண்டி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ள ‘வாரிசு’ படத்தின் பாடல் ஆசிரியரான விவேக், ‘இது துணிவு படத்துடன் ஒப்பிடும் பதிவல்ல, ‘துணிவு’ படம் சிறப்பாக வசூல் செய்ய வாழ்த்துக்கள்’ என்று கூறினார். இதனை அடுத்து ‘வாரிசு’ நன்றாக ஓடும் என்பது தெரிந்த உண்மை ,அதன் ரிப்போர்ட்டுக்காக தான் காத்திருந்தேன், தற்போது 210 கோடி என்று தெரிந்து விட்டது’ என பதிவு செய்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
(Note : Its not a comparative post about Thunivu. Wishing the film and the team well on its run🌹)
— Vivek (@Lyricist_Vivek) January 18, 2023
Its a know fact that Varisu will run well till pongal. But was eagerly waiting for today’s reports. Just got to know it. Ippa Podra BGM ah🔥 pic.twitter.com/7L6rQnpBiQ
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments