'சில உறவுகளை விவரிக்க முடியாது': 'வாரிசு' பிரபலத்திற்கு விஜய் கொடுத்த முத்தம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் ரூபாய் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தில் பணிபுரிந்த பிரபலம் ஒருவருக்கு, தளபதி விஜய் முத்தம் கொடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தில் பாடல்கள் எழுதியதோடு, திரைக்கதையும் எழுதியவர் பாடல் ஆசிரியர் விவேக் என்பது தெரிந்ததே. இவர் கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் படங்களுக்கு அதிக பாடல்கள் எழுதி வருகிறார் என்பதும் குறிப்பாக இவர் எழுதிய ’ஆளப்போறான் தமிழன்’ ’சிங்க பெண்ணே’ போன்ற பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாடலாசிரியர் விவேக் தனது சமூக வலைதளத்தில், விஜய் தனக்கு முத்தம் கொடுத்த புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் ’சில உறவுகளை விவரிக்க முடியாது, இந்த நம்ப முடியாத பயணத்தில் நீங்கள் என்னிடம் ஒரு மூத்த சகோதரர் போல் அன்பும் ஆதரவும் தந்து கொண்டிருக்கிறீர்கள். என் கலைப்பயணத்தில் இந்த அழகான தருணத்தை எதனாலும் வெல்ல முடியாது, லவ் யூ தளபதி’ என்று பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு இயக்குனர் அட்லீ ஹார்ட் லைக்ஸ்களை குவித்துள்ளார் என்பதை குறிப்பிடத்தக்கது.
Some bonds are beyond words. In this unbelievable journey with you, u loved n cared for me like a big brother. All I ever want is best things to happen to best soul like u. In my artistic journey, Nothings gona beat this beautiful frozen moment. Love you for life My Thalapathy😘 pic.twitter.com/jgUZAYMy44
— Vivek (@Lyricist_Vivek) February 18, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com