close
Choose your channels

'துணிவு' 'வாரிசு' முதல் நாள் முதல் காட்சி எப்போது? பரபரப்பு தகவல்

Saturday, January 7, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த 'வாரிசு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் பொங்கல் விருந்தாக வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மேலும் அஜித் நடித்த ’துணிவு’ மற்றும் விஜய் நடித்த ’வாரிசு’ ஆகிய இரண்டு படங்களின் டிரைலர்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இரண்டு படங்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் ஜனவரி 11ஆம் தேதி இரு படங்களும் ஒரே நாளில் வெளியாகும் என்றாலும், முதல் நாள் முதல் காட்சி எப்போது என்பது குறித்த தகவல் தெரியாமல் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது வெளிவந்திருக்கும் தகவலின்படி அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் அதிகாலை ஒரு மணிக்கும், விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் முதல் காட்சியை திரையிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகம் முழுவதும் இரண்டு படங்களுக்கும் கிட்டத்தட்ட சும்மா அளவில் திரையரங்குகள் வழங்கப்பட்டிருப்பதாகவும் இரண்டு படங்களும் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment