வர்தா புயலால் ஏற்பட்ட ஒரே நன்மை
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த திங்கள் அன்று வர்தா புயல் ஏற்படுத்திய பாதிப்பால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் ஆயிரக்கணக்கான மரங்கள் வேறோடு வீழ்ந்தது. இதன் காரணமாக மின் விநியோகம் தடைபட்டு சென்னை மக்களின் ஒரு பகுதியினர் கடந்த மூன்று நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் வர்தா புயலின் ஒரே நன்மையாக சென்னைக்கு குடிநீர் தரும் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இந்த வருடம் பருவமழை பொய்த்த நிலையில் சென்னை மக்களின் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை இருந்தது. ஆனால் வர்தா புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னையை சுற்றியுள்ள ஏரிகளில் நீர்மட்டம் நல்ல நிலையில் உயர்ந்துள்ளது.
140 அடி கொள்ளளவு உள்ள பூண்டி ஏரியில் 1127.60 அடி தண்ணீர் தற்போது உள்ளது. இந்த ஏரியில் இருந்து வினாடிக்கு 1079 கன அடி நீர் வரத்து உள்ளது. அதேபோல் வினாடிக்கு 361 கன அடி நீர் வெளியேறுகிறது.
64.50 அடி கொள்ளளவு உள்ள சோழாபுரம் ஏரியில் தற்போது 49.25 அடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரியில் இருந்து வினாடிக்கு 35 கன அடி நீர் வரத்து உள்ளது. அதேபோல் வினாடிக்கு 448 கன அடி நீர் வெளியேறுகிறது.
85.40 அடி கொள்ளளவு உள்ள செம்பரப்பாக்கம் ஏரியில் தற்போது 69.50 அடி தண்ணீர் உள்ளது. இந்த ஏரிக்கு தண்ணீர் எதுவும் வரவில்லை என்றாலும் வினாடிக்கு 3291 கன அடி நீர் வெளியேறுகிறது.
புயலுக்கு பின் சுமார் 500 மில்லியன் கனஅடி நீர் அதிகரித்துள்ளது.
முக்கிய ஏரிகளில் நீர் இருப்பு நிலவரம்(13/12/16)
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments