மருத்துவ முத்தம் போதும், இனி மருத்துவ யுத்தம்தான் தேவை: திரையுலகினர் கொதிப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
ஜல்லிக்கட்டு, நெடுவாசல், விவசாயிகள் பிரச்சனை என எந்த பிரச்சனைக்கும் முதல் ஆளாக குரல் கொடுப்பது திரையுலகினர்கள் தான். அந்த வகையில் அநியாயமாக அனிதா என்ற உயிர் பலியாகிவிட்டது கோலிவுட் திரையுலகினர்களை கொந்தளிக்க செய்துள்ளது. அனிதாவுக்கு நடந்த கொடுமை குறித்து குரல் கொடுக்காத திரையுலகினர்களே இல்லை என்று கூறலாம். அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்
வரலெட்சுமி சரத்குமார் : இந்த மாதிரியான தற்கொலையைத் தூண்டும் கல்வி முறை நமக்கு கட்டாயம் தேவையா?
பாடலாசிரியர் விவேகா: 'மருத்துவ முத்தம்' இருக்கட்டும். இந்த மருத்துவ யுத்தத்தையும் கவனிப்போம்
இயக்குனர் சி..எஸ்.அமுதன் : இந்த மரணம் மிகவும் சோகமானது; நமக்குக் கோபத்தையும் ஏற்படுத்துகிறது. ஏனென்றால், நாம் அனைவரும் அனிதாவின் ரத்தத்தைக் கைகளில் கொண்டவர்கள்.
இயக்குனர் செல்வராகவன் : என்னை நம்புங்க... வாழ்க்கை பல வாய்ப்புகளைத் தரும்; எதிலும் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதை நான் பலவருடங்களுக்கு முன்பே புரிந்துகொண்டேன். தற்கொலைகள் தீர்வல்ல.
பாடலாசிரியர் விவேக் : நீங்க குடுக்காத டாக்டர் பட்டத்த நாங்க குடுப்போம் டா அவளுக்கு.. வறுமயை, அது கொடுக்குற வலியை, அதை மீற நெனக்கிறவங்க உழைப்ப உணராதவனுக்கான செருப்படி இது.
நடிகை ஶ்ரீதிவ்யா : 'நீட் எனும் பெயரால் ஒரு திறமையான மாணவி சாகடிக்கப்பட்டிருக்கிறார்.'
டிடி என்ற திவ்யதர்ஷினி : நீ படித்த புத்தகங்கள் வாழ்க்கைப் போராட்டத்தைச் சந்திக்கக் கற்றுக்கொடுக்கவில்லையா?
இயக்குநர் கார்த்திக் நரேன் : 17 வயது பெண்ணின் கனவுகளைக் கொல்வது
இயக்குனர் மோகன் ராஜா : இது ஒரு கருப்பு நாள்! அவர் உயிருடன் இருந்திருந்தால் பலரது உடல் நோயை குணப்படுத்தியிருப்பார். ஆனால் இன்று அவர் இறந்து பலர் மனநோயாளிகள் ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது
இயக்குனர் வெங்கட்பிரபு : கேட்கவே மிகவும் ஆழ்ந்த வேதனையாக இருக்கிறது.
இசையமைப்பாளர் டி.இமான் : இன்னும் நிறைய அனிதாக்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்களைக் காக்க நமது கல்விமுறையை மறுபரிசீலனை செய்யவேண்டிய நேரம் இது.
கவியரசு வைரமுத்து : அடி பாவி மகளே' என்று நெஞ்சு பதறுகிறது. அனிதாவின் தற்கொலையும் சமூக நீதியின் கொலையும் ஒரே தருணத்தில் நிகழ்ந்திருக்கின்றன.
நடிகை நிக்கி கல்ராணி : ஒரு அப்பாவிப் பொண்ணோட வாழ்க்கை இப்படித்தான் முடியணுமா?
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout